Tokyo Olympics: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் இரண்டாவது பதக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய  குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன், பெண்கள் 69 கிலோ பிரிவில் காலிறுதியில் சீன தாய்பேயின் நியான் சின் சென் -ஐ தோற்கடித்தார். இதன் மூலம் லோவ்லினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் லாவ்லீனா போர்கோஹெய்ன் குத்துச்சண்டையில் வரலாறு படைத்துள்ளார். அசாமை சேர்ந்த குத்துச்சண்டை வீரர், இந்தியாவிற்கு மற்றொரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.


இனி அரையிறுதியில், லவ்லினா உலக சாம்பியனுடன் போட்டியிடுவார். அரையிறுதியில், அவர் உலக சாம்பியனான துருக்கியின் குத்துச்சண்டை வீரர் புசனேஸ் சுர்மெனெலியை எதிர்கொள்கிறார். லோவ்லினா தனது முதல் சுற்றில் சீன தைபே குத்துச்சண்டை வீரரை 3-2 என்ற கணக்கில் வென்றார். இதன் பின்னர், இந்த முடிவு இரண்டாவது சுற்றில் லோவ்லினாவுக்கு ஆதரவாக சென்றது. மூன்றாவது சுற்றில், சீன தைபே குத்துச்சண்டை வீரர் வெற்றி பெரும் நிலைக்கு வந்தார், ஆனால் லவ்லினா சிறப்பாக விளையாடி சீன தைபே குத்துச்சண்டை வீராங்கனைக்கு வெற்றி பெரும் எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை.


Also Read | sex at Olympics: ஒலிம்பிக் போட்டிகளில் ஆணுறைகள் மற்றும் செக்ஸ் விழிப்புணர்வு


சீன தாய்பேயைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனைக்கு எதிரான லாவ்லீனாவின் நான்காவது போட்டி  இதுவாகும். முந்தைய 3 போட்டிகளில், ஒவ்வொரு முறையும் சீன  தாபேய் குத்துச்சண்டை வீரருக்கு எதிராக தோற்றார், ஆனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வென்று வரலாறு படைத்தார். இந்தியாவில் இதற்கு முன் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங் (2008) மற்றும் எம்சி மேரி கோம் (2012) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.


Also Read | மகளிர் குத்துச் சண்டை போட்டியில் லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR