டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதன் முறையாக ஒலிம்பிக்கில் பதக்கத்தை வெல்லும் நோக்கத்தில் இங்கிலாந்தை எதிர்த்து களம் இறங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்றைய முதல் ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது ஆட்டத்தில் நான்கு கோல்கள் அடிக்கப்பட்டன. 16-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி 16 மற்றும் 24-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து இந்தியாவுக்கு (Indian Hockey Team) சவால் நிலைக்குத்தள்ளியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆக்ரோஷமாக விளையாடிய இந்தியா அணி 2 கோல்கள் அடித்தது. இந்தியா வீராங்கனை குர்ஜித் கவுர் 25 மற்றும் 26வது நிமிடத்தில் கோல் அடித்தார். 29-வது நிமிடத்தில் வந்தனா கட்டாரியா ஒரு கோல் அடிக்க இந்தியா 3-2 என முன்னிலைப் பெற்றது.


ALSO READ | 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் வெண்கலம் வென்றது இந்தியா


3-வது ஆட்ட பகுதியில் இங்கிலாந்து வீராங்கனைகள் கோல் அடிக்கும் முயற்சியில் விளையாடினார்கள். அடிக்கடி பந்தை இந்திய கோல் கம்பம் அருகில் கடத்திச் சென்றனர். 35-வது நிமிடத்தில் இங்கிலாந்து மேலும் ஒரு கோல் அடித்து 3-3 என சமநிலைப் பெற்றது. கடைசி வினாடியில் இந்தியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை கோலாக மாற்ற இந்திய வீராங்கனைகள் தவறியதால் 3-3 என சமநிலைப் பெற்றது.


48-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியான வகையில் பயன்படுத்தி கோல் அடித்தனர். இதனால் இங்கிலாந்து 4-3 என முன்னிலைப் பெற்றது. கடைசி 12 நிமிடங்களில் இந்திய வீராங்கனைகள் கோல் அடிக்க முயற்சித்தும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 3-4 எனத் தோல்வி அடைந்து, ஹாக்கி வரலாற்றில் ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் அரிதான வாய்ப்பை இழந்தனர்.


ALSO READ | Tokyo Olympics: பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து வெண்கலம் வென்றார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR