இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை திணறடிக்க தயாராகும் ட்ரெண்ட் போல்ட்!
இந்திய பேட்ஸ்மேன்களை எவ்வாறு திணறடிக்க விரும்புகிறேன் என்பதை கூறியுள்ளார் ட்ரெண்ட் போல்ட்
நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் இன்று இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் விளையாட உள்ளது. ஐபிஎல்லில் விளையாடியதன் காரணமாக இந்திய அணியின் பேஸ்மேன்களுக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்ற யுத்தியினை நன்றாக தெரிந்து வைத்துள்ளனர் நியூஸிலாந்து பவுலர்கள். முந்தைய ஆட்டங்களில் நியூஸிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள இந்திய அணி திணறியது கேன் வில்லியம்சன்னிற்கு இன்று ஆறுதலாக இருக்கிறது.
ALSO READ சூப்பர் 12: 9 போட்டிகளில் 8 முறை வென்ற சேஸிங் அணி! காரணம் என்ன?
இந்திய அணியை திணறடிக்க ட்ரெண்ட் போல்ட் மிக முக்கிய வீரராக கருதப்படுகிறார். மேலும், இந்திய அணியை எப்படி திணறடிக்க விரும்புகிறேன் என்பதை கூறியுள்ளார் போல்ட். இது குறித்து போல்ட் கூறியதாவது, "ஒரு குழுவாக இணைந்து இந்திய அணியின் டாப் ஆர்டர் விக்கெட்களை முதலில் எடுக்க முயற்சி செய்வோம். பந்தை எங்கு போட முயற்சிக்கிறோம் என்பதில் அழகாகவும், தெளிவாகவும், துல்லியமாகவும் இருக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அப்ரிடியின் பந்து வீச்சை எதிர்கொள்ள இந்திய அணி திணறியது. அதே போல் நானும் பந்து வீச உள்ளேன்.
இந்திய அணியில் தரமான பேஸ்ட்மேன்கள் உள்ளனர். அவர்களின் விக்கெட்களை வீழ்த்த சிறிய திட்டம் தேவைப்படுகிறது. பாகிஸ்தான் பவுலர்கள் செய்ததை என்னால் செய்ய முடியும். இதற்க்கு முன் நடைபெற்ற ஐசிசி போட்டிகளில் நியூஸிலாந்து அணி இந்தியாவை வென்றுள்ளது. அதற்காக, இந்திய அணியை குறைத்து மதிப்பிட இயலாது. இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது எப்போதும் ஒரு வித மகிழ்ச்சியை அளிக்கும். கடந்த போட்டிகளில் நாங்கள் இந்திய அணியை வீழ்த்தி உள்ளோம். இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமானது. இரண்டு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்" என்று கூறினார்.
2019ம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி போட்டியிலும், உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டியிலும் இந்திய அணியினை வீழ்த்தியது நியூஸிலாந்து அணி. இன்றைய போட்டியில் இதற்க்கு பழி தீர்க்குமா இந்திய அணி என்று அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ALSO READ வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR