உலக கோப்பை 2021 போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் போட்டிகள் முடிவடைந்து சூப்பர் 12 அணிகளுக்கான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி வரலாற்று வெற்றி பெற்றது.
ALSO READ இந்தியாவுக்கு உலகக்கோப்பை பெற்றுத்தந்தவர் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராகிறார்!
அபு தாபி, துபாய், சார்ஜா என மூன்று மைதானங்களில் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த 9 சூப்பர்12 போட்டிகளில் 8 முறை சேஸிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளது. இது அனைவருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அமீரகத்தில் டாஸ் வெல்லும் அணிகள் பெரும்பாலும் முதலில் பவுலிங் செய்யவே தேர்வு செய்கின்றனர். இரண்டாம் பாதியில் ஏற்படும் ஈரப்பதமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனாலேயே தற்போது உலக கோப்பை போட்டியில் டாஸ் வெல்வது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
சூப்பர் 12 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி மட்டுமே இதுவரை முதலில் பேட்டிங் செய்து வென்றுள்ளது. ஸ்காட்லாந்து அணியை 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மீதமுள்ள அனைத்து அணிகளும் இரண்டாவதாக பேட்டிங் செய்தே வென்றுள்ளது. ஐபிஎல் பிளே ஆப் போட்டிகளிலும் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகளே வென்றது. இறுதி போட்டியில் மட்டுமே சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து வென்றது.
அணியில் முக்கியமான வீரர்களை தேர்வு செய்வதை விட டாஸ் வெல்வது எப்படி என்றே அனைத்து நாட்டு கேப்டன்களும் யோசித்து வருகின்றனர். இந்திய அணி கேப்டன் கோலிக்கு டாஸ் வெல்வதே மிகப்பெரும் சாதனையாக இருந்து வருகிறது. வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறும் போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ALSO READ இந்தியா - நியூசிலாந்து போட்டியில் களம் இறங்குவாரா ஹர்திக் பாண்டியா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR