புதுடெல்லி: துபாயின் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020 இன் ஏழாவது ஆட்டங்களில் டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக் கொண்டது. இதனால் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் தங்கள் மனக்கசப்பைக் காட்டியுள்ளனர்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வெற்றியின் மூலம், டெல்லி கேபிடல்ஸ் அணி,  2010 க்குப் பிறகு இப்போது முதல் முறையாக ஐபிஎல் சீசனின் தொடக்கத்தின் இரண்டு போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுள்ளது.டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய டெல்லி கேபிடல்ஸ் அணியை அழைத்தது.


தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் (35), பிருத்வி ஷா ஆகியோர் டெல்லிக்கு சிறந்த தொடக்கத்தை அளித்து 94 ரன்கள் எடுத்தனர்.பிருத்வி ஷா துரிதமாக 64 ரன்கள் எடுத்தார்.  
ரிஷாப் பந்த் (37 *) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் (26) ஆகியோர் அணியின் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்தனர்.  


மட்டை வீசிய டெல்லி கேபிடல்ஸ் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து மட்டை வீசக் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய் மற்றும் ஷேன் வாட்சன் இருவரும் முறையே 10 மற்றும் 14 என்ற ரன்களில் ஆட்டமிழந்தனர்.


இதனையடுத்து, ருதுராஜ் கெய்க்வாட் ஐந்து ரன்களில் வெளியேறினார். Faf du Plessis (43), கேதர் ஜாதவ் (26) ஆகியோர் சிஎஸ்கேவின் இன்னிங்ஸை ஓரளவுக்கு சமாளித்தனர்.  


இருவரும் அவுட்டாடி வெளியேறிய பின் தோனியும், அவரது அனியினரும் நிர்ணயித்த 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தனர்.


டெல்லி கேபிடல்ஸ் அணியின்  Kagiso Rabada, 26 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  Anrich Nortje இரண்டு விக்கெட்டுகளையும், Axar Patel ஒரு விக்கெட்டையும் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.  



அக்டோபர் 2 ம் தேதி நடைபெறும் அடுத்த மோதலில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்ளும் போது சிஎஸ்கே தனது நிலையை மேம்படுத்த வேண்டும்., அதே சமயம் செப்டம்பர் 29 அன்று அதே அணியை எதிர்கொள்ளும் போது டெல்லி கேபிடல்ஸ் அணி, தனது வெற்றியைத் தொடர முயற்சிக்கும்.   


இந்த நிலையில் ட்விட்டரில் மும்பை இண்டியன்ஸ் அணியை ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். அதில் சில...