நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா போராடி தோல்வி பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூசிலாந்து - இந்தியா மகளிர் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னதாக ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து தற்போது டி20 போட்டிகள் நடைப்பெற்று வருகிறது.


தற்போது நடைப்பெற்று வரும் டி20 தொடரின் முதல் போட்டி கடந்த பிப்., 6-ஆம் நாள் விள்ளிங்டன் வெஸ்ட்பேக் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் நியூசிலாந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று எட்டன் பார்க் மைதானத்தில் நடைப்பெற்றது.


இப்போட்டில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. இந்தியா சார்பில் துவக்க வீரங்கனைகள் பிரியா பூனியா 4(10), ஸ்மிரித்தி மந்தனா 36(27) ரன்களில் வெளியேற முதல் விக்கெட்டுக்கு களமிறங்கி ஜாம்மியா 72(53) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். இதன் காரணமாக இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.


நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து வீராங்கனைகள்., வெற்றி இலக்கை எட்டு கடுமையாக போராடினர். இதன் காரணமாக ஆட்டத்தின் கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டி தொடரில் 2-0 என கைப்பற்றியது. நியூசிலாந்து அணி தரப்பில் சுயிஸ் பேட்ஸ் 62(52), எமி சாட்டர்வெயிட் 23(20) ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இப்போட்டியின் வெற்றி மூலம் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து, 3-வது டி20 போட்டியில் இந்தியாவை வரும் பிப்ரவரி 10-ஆம் நாள் எதிர்கொள்கிறது.