பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா பேசியதாக தற்போது சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.  அதில், “ஐ லவ் யூ என்கிறீர்கள்...இல்லை முதலில் ஐ லவ் யூ என்று சொல்லுங்கள்..ஒருமுறை தைரியமாக..ஒருமுறை தைரியமாக” என்று அவர் கூறுவதைக் காணலாம்.  இந்நிலையில்,  இன்று அதிகாலை சமூக ஊடகங்களில் தனது வைரலான ‘ஐ லவ் யூ’ வீடியோ குறித்து ஒரு விளக்கத்தை வெளியிட்டார் ஊர்வசி. தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர், “தற்போது பரவி வரும் எனது ஐ லவ் யூ வீடியோவைப் பற்றி மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்... இது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ. யாரையும் குறிப்பிட்டு சொல்லப்பட்டது இல்லை" என்று விளக்கம் அளித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பாகிஸ்தானுக்கு இந்தியா போகாது... ஜெய் ஷா அறிவிப்பு?



இருப்பினும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் தற்போது இணையவாசிகளால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார் ஊர்வசி.  ஆஸ்திரேலியாவில் 2022 ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சியில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது.  இந்நிலையில் ஆஸ்திரேலியா சென்றுள்ள ஊர்வசி அங்கிருந்து புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டார்.  இந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் ஊர்வசி ஒரு நேர்காணலில் “மிஸ்டர் ஆர்பி” தன்னைச் சந்திக்க ஒரு ஹோட்டல் லாபியில் ஏறக்குறைய 10 மணிநேரம் காத்திருந்ததாகவும், அவரை இவ்வளவு நேரம் காத்திருக்க வைத்ததற்காக வருத்தப்பட்டதாகவும் கூறினார்.



ஊர்வசி இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தை தான் சொல்கிறார் என்று அவரை ட்ரோல் செய்து வந்தனர். ரிஷப் பண்ட் பின்னர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "சில அற்ப பிரபலத்திற்காகவும் தலைப்புச் செய்திகளில் வருவதற்காகவும் நேர்காணல்களில் எப்படி பொய் சொல்கிறார்கள். சிலர் புகழுக்காகவும் பெயருக்காகவும் ஏங்குவது வருத்தமாக இருக்கிறது. கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று பதிவு செய்திருந்தார்.  இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஊர்வசி, “சோட்டு பையா பேட் பந்து விளையாட வேண்டும்... நான் புகழுக்காக ஏங்கவில்லை, ரக்ஷபந்தன் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டு இருந்தார்.  


மேலும் படிக்க | டி20 உலகக்கோப்பை : தமிழில் திட்டம் தீட்டி விக்கெட் எடுத்த யுஏஇ வீரர்கள் - யார் அவர்கள்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ