ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற பிறகு, ஒரு நாள் தொடரில் விளையாடும் அணியில் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி இடம் பிடித்துள்ளார். இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் அடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் வெறும் நான்கு ரன்களுக்கு இந்திய அணி மூன்று விக்கெட்டுக்களை (ஷிகர் ௦, விராட் 3, அம்பதி௦) இழந்து தடுமாறியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் பின்னர் களம் இறங்கிய முன்னால் கேப்டன்  எம்.எஸ். தோனி, இந்திய அணியின் தொடக்கவீரர்ரான ரோஹித்துடன் இணைந்து ஆடினார். இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஒரு கட்டத்தில் இருவரும் அரைசதம் அடித்தனர்.


எம்.எஸ் தோனி 96 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்த போது, பெஹண்ட்ரூஃப் பந்தில் எல்.பி.டபிள்யூ மூலம் அவுட் ஆனார். ஆனால் இது அம்பயரின் தவறான முடிவு என விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. அவர் அவுட் ஆனாரா? இல்லையா? வீடியோ பார்க்கவும்.


 



இந்த போட்டியில் எம்.எஸ். தோனி அரைசதம் அடித்தார். இதற்க்கு முன்பு அவர் கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிராக அரைசதம் அடுத்தார். சுமார் 13 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தோனி அரைசதம் அடித்துள்ளார். 2017 டிசம்பர் மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு முழுவதும், எம்.எஸ் தோனி மொத்தம் 22 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆனால் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தின் முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து, 2019 உலக கோப்பை போட்டிக்கு நான் ரெடியாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.