பார்ப்பதற்கே பல கோடி கண்கள் வேண்டும் - மாஸ்டர் பிளாஸ்டரின் மாஸான ஷாட்!
சாலை பாதுகாப்பு உலக தொடரை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு அவர் அடித்த ஷாட் ஒன்று தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்று ஏறத்தாழ 10 ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது. தற்போது, அவர் சாலை பாதுகாப்பு உலக தொடரில், இந்திய லெஜண்ட்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார். சாலை பாதுகாப்பு உலக தொடரின் இரண்டாவது சீசன் இந்தியாவின் 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.
நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய லெஜண்ட்ஸ் அபார வெற்றியை பெற்றது. அப்போட்டியில், ஸ்டூவர்ட் பின்னி 24 பந்துகளில் 82 ரன்களை குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார். தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 217 ரன்களை குவித்தது. மேலும், அடுத்த ஆடிய தென்னாப்பிரிக்கா 156 ரன்கள் மட்டுமே எடுத்தனர். மேலும், இந்தியா - மே.இ. தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி, மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் படிக்க | சச்சின் மகளை தவிர்த்து மற்றொரு நடிகையை டேட்டிங் செய்யும் கில்?
இந்நிலையில், நியூசிலாந்து அணியுடனான நாளைய போட்டியை எதிர்நோக்கி இந்திய அணி காத்திருக்கிறது. இதனால், இந்திய லெஜண்ட்ஸ் அணியின் கேப்டன் சச்சின் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர், வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது, அவர் இறங்கிவந்து ஆஃப் சைட்டில் தூக்கி அடித்த ஷாட்டின் வீடியோ ட்விட்டரில் ஹிட்டாகி வருகிறது. பழைய சச்சினை பார்ப்பது போல் இருக்கிறது என அவரது ரசிகர்கள், கமெண்ட்ஸ் முழுவதும் தங்களின் ஹார்ட்டுகளை நிரப்பி வருகின்றனர்.
முதல் போட்டியில் சச்சின் 16 ரன்களை எடுத்த நிலையில், நாளைய போட்டியில் அரைசதம் அடிப்பார் எனவும் ரசிகர்கள் ஆருடம் கூறி வருகின்றனர். இந்தூரில் நடைபெறும் இப்போட்டி நாளை (செப். 19) இரவு 7.30 மணிக்கு நடைபெறும். கடந்த சீசனில் நியூசிலாந்து அணி விளையாடாவில்லை. ராஸ் டெய்லர் தலைமையிலான நியூசிலாந்து லெஜண்ட்ஸ் அணி, இத்தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் தோல்வியடைந்தது. பின்னர் 2ஆவது போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தியிருந்தது.
இந்திய லெஜண்ட்ஸ்: சச்சின் டெண்டுல்கர் (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ஸ்டூவர்ட் பின்னி, யுவராஜ் சிங், யூசுப் பதான், நமன் ஓஜா (விக்கெட் கீப்பர்), மன்பிரீத் சிங், இர்பான் பதான், முனாப் படேல், ராகுல் சர்மா, பிரக்யான் ஓஜா.
நியூசிலாந்து லெஜ்ண்ட்ஸ்: அன்டன் டெவ்சிச், ஜேமி ஹவ், டீன் பிரவுன்லி, ராஸ் டெய்லர் (கேப்டன்), நீல் புரூம், கரேத் ஹாப்கின்ஸ் (விக்கெட் கீப்பர்), ஜேசன் ஸ்பைஸ், ஹமிஷ் பென்னட், கைல் மில்ஸ், ஸ்காட் ஸ்டைரிஸ், ஜேம்ஸ் பிராங்க்ளின்
மேலும் படிக்க | ஆஸ்திரேலியா தொடரில் இருந்து ஷமி வெளியேற்றம்! இந்த வீரருக்கு வாய்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ