SACHIN: 2 இந்திய வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் சச்சினின் நண்பர்
தென்ஆப்பிரிக்கா செல்லும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள ரிஷப்பன்ட் மற்றும் அஜிங்கியா ரகானே ஆகியோர், சச்சினின் நெருங்கிய நண்பரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான வினோத் காம்ப்ளியிடம் பயிற்சி பெற்றுள்ளனர்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது. இதற்காக, வரும் 16 ஆம் தேதி இந்திய அணி தென்னாப்பிரிக்கா புறப்பட உள்ளது. மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய வீரர்கள், இந்த தொடரில் சிறப்பான பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்பதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அண்மைக்காலமாக மோசமான ஃபார்மில் இருக்கும் ரஹானே, இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருந்தாலும் ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா? என்பது இப்போதைக்கு கேள்விக்குறியாக உள்ளது.
ALSO READ | தென்ஆப்பரிக்க தொடரில் விராட் விலகுவது ஏன்? பின்னணி
ஏற்கனவே அவர் வசம் இருந்த துணைக் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டுள்ளதால், நீண்ட நாட்களுக்குப் பிறகு பேட்ஸ்மேனாக தென்னாப்பிரிக்கா தொடரில் பங்கேற்க உள்ளார். ஒருவேளை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்புக் கிடைத்தால் அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் அவர், மும்பையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். சச்சினின் நெருங்கிய நண்பரும், இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் துணைக் கேப்டனாகவும் இருந்த வினோத் காம்ப்ளியிடம் ரஹானே நேரடியாக பயிற்சி பெற்றுள்ளார். அவருடன் இணைந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்டும், பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ALSO READ | IPL Mega Auction: பணக்கார பிரீத்தி ஜிந்தா! டெல்லி கேபிடல்ஸ் ஏழை? 8 அணிகளின் நிதி நிலைமை
இதனை வினோத்காம்ப்ளி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரஹானே, ரிஷப் பண்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள வினோத் காம்ப்ளி, அவர்கள் இருவருக்கும் பயிற்சி கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளார். இந்த பயிற்சியின்போது வினோத் காம்ப்ளியின் மகன் கிறிஸ்டியானோவும் இருந்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR