புதுடெல்லி: கோபா அமெரிக்கா 2021 இறுதிப் போட்டியில் பிரேசில் அர்ஜென்டினாவை எதிர்கொள்ளும் போது ‘நட்பு நிலைத்திருக்கும்’ என்று லியோனல் மெஸ்ஸிஸின் ரசிகரான பிரேசில் அணி வீரர் நெய்மர் கூறியிருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவீன காலத்தின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் இருவர் - லியோனல் மெஸ்ஸி மற்றும் நெய்மர். இருவரும் கிளப் மட்டத்தில் விளையாடும்போது நிறைய வெற்றிகளைப் பெற்றிருந்தனர். இந்த இரு கால்பந்து வீரர்களும் சர்வதேச போட்டியில் நேருக்கு நேர் மோதும் அணியில் இருந்தனர். இருவருக்குமே அவர்கள் அணி வெற்றிப்பெற வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.


கோபா அமெரிக்கா 2021 இறுதிப்போட்டியில் பிரேசில் அணி தோல்வியடைந்த பிறகு பிரபல நெய்மர் மனச்சோர்வடைந்தார். இதைக் கண்ட லியோனல் மெஸ்ஸி அவரிடம் சென்று, அவரைக் கட்டிப்பிடித்து ஆறுதல்படுத்தினார். இந்த செயல், மெஸ்ஸியின் அன்பையும், பண்பையும் காட்டுவதாக இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது.




 


துரதிர்ஷ்டவசமாக, ஏஞ்சல் டி மரியாவின் ஒரு கோலுக்கு நெய்மரும் பிரேசிலும் தோல்வியடைந்தனர். சர்வதேச பட்டத்தை வெல்ல நெய்மருக்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஆனால் இது 34 வயதான மெஸ்ஸியின் கடைசி வாய்ப்பு இது.


தனது கடைசி வாய்ப்பை மெஸ்ஸி பயன்படுத்திக் கொண்டார். தற்போது உலகில் மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற பெருமையையும் மெஸ்ஸி அடைந்துவிட்டார்.


போட்டியில் தோல்வியடைந்த பிறகு, நெய்மர் மனம் உடைந்ததை மெஸ்ஸி பார்த்தார், அவர் வெறுப்பிலும் துக்கத்திலும் நடந்து கொண்டிருந்தபோது, அர்ஜென்டினா அணி வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. ஆனால் நெய்மர் மனமுடைந்து போனதைக் கண்டு, மெஸ்ஸி அவரிடம் நடந்து, அவரைக் கட்டிப்பிடித்து ஆறுதல்படுத்த முயன்றது அவரது பெருந்தன்மையைக் காட்டியது.


Also Read | இனி லியோனல் மெஸ்ஸி எந்த அணிக்கும் சொந்தமில்லை, தனி வீரரானர்


மெஸ்ஸி இப்போது எந்தவொரு அணியிலும் இணைந்திருக்கவில்லை. முன்னாள் பார்சிலோனா அணியின் சிறந்த வீரரை தங்கள் அணியில் சேர்ப்பதில் PSG ஆர்வம் காட்டக்கூடும் என்ற ஊகங்கள் உள்ளன. அது நடந்தால், மெஸ்ஸி நெய்மருடன் மீண்டும் ஒன்றிணைவார், அது ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.  


தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடரில்,  பிரேசிலை வீழ்த்தி கோப்பையை வென்றது அர்ஜென்டினா. பிரேசிலில் ரியோ டி ஜெனீரோவில் உள்ள மரக்கானா ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டித் தொடரில்  10 அணிகள் பங்கேற்ற நிலையில், பிரேசில் அணியும், அர்ஜென்டினா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.


இந்நிலையில், இன்று நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை கைப்பற்றியது.


ALSO READ | Euro 2020: இங்கிலாந்துக்கு எதிராக UEFA ஒழுங்கு நடவடிக்கை! காரணம் தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR