இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக ஃபார்ம் இன்றி தவித்து வந்தார். ஏறத்தாழ 3 ஆண்டுகள் ஒரு சர்வதேச சதம் கூட அடிக்காத அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனால், கோலி எப்போது மீண்டும் ஃபார்முக்கு வருவார்? என்ற கேள்வி எழுந்தது. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்புவதை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஒருவழியாக ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் பழைய விராட் கோலியை பார்க்க முடிந்தது. இலங்கை அணிக்கு எதிரான போட்டியை தவிர்த்து மற்ற போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதன்முறையாக சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் முதல் சதத்தை பூர்த்தி செய்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Asia Cup2022: விராட் கோலிக்காக காத்திருக்கும் சாதனை


கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அடிக்கும் முதல் சர்வதேச சதமாகும். ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 71வது சதத்தை அடித்து, இதுநாள் வரை வந்த விமர்சனங்களுக்கு ‘நான் திரும்ப வந்துட்டேனு சொல்லு’ என தனக்கே உரிய பாணியில் கம்பீரமாக பேட் மூலம் பதில் அளித்தார். அவருடைய இந்த சதத்தை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். தன்னுடைய இந்த சதத்தை கடினமான காலங்களில் என்னுடன் இருந்த மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகளுக்கு அர்ப்பணிப்பதாக விராட் கோலி உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார்.



இதற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரியாக்ஷன் கொடுத்துள்ள அனுஷ்கா சர்மா, "என்றென்றும் உன் மீது அன்பு செலுத்துவேன், எக்காலத்திலும்... எப்படியான சூழலிலும்.. நீங்கள் மட்டுமே அன்பே" என உணர்ச்சிகரமாக பதிவிட்டுள்ளார். டிவில்லியர்ஸ் தன்னுடைய பதிவில், மிகச்சிறந்த ஆட்டம், இதேபோல் இன்னும் பல உங்களிடம் இருந்து வரட்டும் எனக் கூறியுள்ளார். ரவிசாஸ்திரி பேசும்போது, " உலகக்கோப்பை வர இருக்கும் நேரத்தில் விராட் கோலியிடம் இருந்து வந்திருக்கும் இந்த நூறு, இந்திய அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கும்" எனத் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் பேசும்போது, விராட் கோலியின் கிளாஸ் ஆட்டம் மீது எப்போதும் மதிப்பு உண்டு. டிரெஸ்ஸிங் ரூமில் எங்களுக்கு எல்லாம் அவர் முன்மாதிரி. அப்படி தான் நாங்கள் அவரை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என பெருமையாக கூறினார். 



இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் பேசும்போது, விராட் கோலியின் இந்த ஃபார்ம் நிச்சயம் மற்றவர்களுக்கு பயத்தைக் கொடுக்கும். 20 ஓவர் உலகக்கோப்பையில் நிச்சயம் அவர் இந்திய அணிக்காக 3வது ஆர்டரில் களமிறங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | இந்த பிளேயர் இருந்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ