ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோத இருக்கின்றன. துபாய் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிய கோப்பை தொடரில் நீடிக்க முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்க இருக்கிறது. வாழ்வா? சாவா? என்ற நிலையில் இலங்கை அணியை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கும் நிலையில், விராட் கோலிக்காக ஒரு உலக சாதனை ஒன்றும் காத்திருக்கிறது. அவர் இன்றைய போட்டியில் 36 ரன்கள் எடுத்தால், 20 ஓவர் போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த 2வது வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக மாறுவார்.
முதல் இடத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். அவர் 3548 ரன்களுடன் உலக அளவில் அதிக ரன்கள் அடுத்தவர்கள் பட்டியலில் டாப்பில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் உள்ளார். அவர் இதுவரை 3497 ரன்கள் எடுத்துள்ளார். இவர்கள் இருவருக்கும் அடுத்த இடத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இருக்கிறார். தற்போது விராட் கோலி 3462 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இலங்கை அணியுடனும் அவருக்கு நல்ல ரெக்கார்டு இருக்கிறது. இதுவரை இலங்கை அணிக்கு எதிராக 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணி விளையாடியபோதெல்லாம் கோலி தனி ஒருவராக சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார்.
இன்று நடைபெறும் போட்டியிலும் அதேபோல் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி இன்று இலங்கையை அணியை வீழ்த்துவதுடன் அடுத்தாக ஆப்கானிஸ்தான் அணியையும் வீழ்த்த வேண்டும். இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை நினைத்து பார்க்க முடியும். இரண்டில் ஒரு போட்டியில் தோல்வியை தழுவினால்கூட தொடரில் இருந்து வெளியேறும் சூழலுக்கு தள்ளப்படும். இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 20 ஓவர் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்க இருக்கிறது.
மேலும் படிக்க | இதை செய்தால் மட்டுமே இந்தியாவால் ஆசிய கோப்பை பைனலுக்கு தகுதி பெற முடியும்!
மேலும் படிக்க | இந்த வீரரை கவனிக்காத இந்திய அணி: ரோகித் இடம் கொடுக்காதது ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ