ஆசிய கோப்பை 2022: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 2022 ஆசிய கோப்பையில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது. ஆசிய கோப்பை 2022 சூப்பர் 4 ஸ்டேஜில் இந்திய அணி பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய நிலையில், அடுத்த போட்டியில் இலங்கை அணியிடம் வீழ்ந்தது. இதனால் இந்திய அணியின் ஆசிய கோப்பை கனவு ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது எனக் கூறலாம்.
தோல்விக்கு காரணம் என்ன?
கேப்டன் ரோகித் சர்மாவின் ஒரு சில தவறான முடிவுகள் இந்திய அணிக்கு பெரும் பாதகமாக அமைந்துவிட்டது. அவரின் டீம் தேர்வு கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. ரிஷப் பன்ட் மோசமாக விளையாடியபோதும் அவருக்கு அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பு கொடுத்தார். அதேநேரதிதல் பார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக்கை முதல் போட்டியில் களமிறங்கிய பிறகு, அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெளியே உட்கார வைத்தார்.
மேலும் படிக்க | இன்னும் இந்தியாவிற்கு ஆசிய கோப்பை இறுதிக்கு செல்ல வாய்ப்பு வாய்ப்புள்ளதா?
மேட்ச் வின்னர் தினேஷ் கார்த்திக்
இந்திய அணியின் தோல்விக்கு சரியான மிடில் ஆர்டர்கள் இல்லை எனக் கூறலாம். மிடில் வரிசையில் களமிறங்கிய ரிஷப் பன்ட், இரு போட்டிகளிலும் சொதப்பினார். அவரின் சொதப்பல் ஆட்டம் இந்திய அணிக்கு பெரும் பாதகமாக இருந்தது. அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை களமிறக்கியிருக்கலாம். இடது கை பேட்ஸ்மேன் வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ரிஷப் பன்டை இறக்கியிருக்கிறார்கள். அப்படி பார்த்தால் ஆல்ரவுண்டரான அக்ஷர் படேலுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.
வாய்ப்பை வீண்டித்த வீரர்
இது தொடர்பாக ரோகித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட் எடுத்த முடிவுகள் இந்திய அணியின் ஆசிய கோப்பை தோல்விக்கு முக்கிய காரணமாக வல்லுநர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர். ரிஷப் பன்டை போல் வாய்ப்பை வீண்டித்த மற்றொரு வீரர் தீபக் ஹூடா. அவரும் தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவரை முன்கூட்டியே இறக்கியிருக்க வேண்டும் என்ற பேச்சு இருந்தாலும், கிடைத்த வாய்ப்பை தனக்கானதாக அவர் மாற்றிக் கொள்ளவில்லை.
மேலும் படிக்க | Asia Cup2022: விராட் கோலிக்காக காத்திருக்கும் சாதனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ