’விராட் ரொம்ப ஸ்மார்ட்’ புகழ்ந்த தென்னாப்பிரிக்கா பவுலர்..!
விராட் கோலி ஸ்மார்டாக விளையாடியதாக தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர பவுலர் ரபாடா புகழ்ந்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடமல் இருந்த விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பினார். டாஸ் வெற்றி பெற்று பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் விரைவாக விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.
ALSO READ | இந்த முறையும் சதத்தை மிஸ் செய்த விராட் கோலி!
மிடில் ஆர்டரில் களமிறங்கிய கோலி மிகவும் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். 16வது பந்தில் பவுண்டரி மூலம் ரன் கணக்கை தொடங்கினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்து கொண்டிருந்தாலும், கோலி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். 158 பந்துகளில் தன்னுடைய 28வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஆனால் அவரை ஆட்டமிழக்க செய்ய வேண்டும் என்பதில் கங்கனம் கட்டிக் கொண்டு பந்துவீசினார் தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரபாடா. புதிய பந்து கைக்கு கிடைத்தவுடன் தொடர்ச்சியாக ரபாடாவும், ஆலிவரும் 16 ஓவர்களை தொடர்ச்சியாக வீசினர்.
ALSO READ | ஐபிஎல் 2022 - அகமதாபாத் அணியின் கேப்டனாகிறார் ஹர்திக் பாண்டியா?
அவரின் இடைவிடாத முயற்சிக்கு ஒருவழியாக விராட் கோலி விக்கெட் கிடைத்தது. 79 ரன்கள் எடுத்திருந்தபோது விராட் கோலி கீப்பர் கேட்ச் என்ற முறையில் அவுட்டானார். கடந்த 26 இன்னிங்ஸில் அவர் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். மீண்டும் சதமடிக்க வேண்டும் என்ற அவருடைய எதிர்பார்ப்பு தள்ளிப்போய்கொண்டே உள்ளது. இந்நிலையில், இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய ரபாடா, விராட் கோலியை விக்கெட் எடுப்பதற்காக பந்தை ஸ்டம்புக்கு வெளியே வீசினேன், ஆனால், அவர் ரொம்ப ஸ்மார்டாக விளையாடினார் எனத் தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR