விருஷ்கா என செல்லமாக அழைக்கப்படும் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதிகள் தற்போது கோவிட் -19 நிவாரணப் பணிகளுக்கான நிதி திரட்டும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்கள் ரசிகர்கள் கொரோனா நிவாரண பணிகளுக்கு தாராளமாக நிதியுதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இரண்டு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர்.  



சமூக ஊடகங்களில் கோஹ்லியும் அனுஷ்காவும் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில்,  இந்தியாவில் கோவிட் -19 துரிதமாக பரவுவது குறித்து தங்கள் கவலைகளை பகிர்ந்துக் கொண்டனர். நிவாரணப் பணிகளுக்காக தாங்கள் ஏற்பாடு செய்த நிதி சேகரிப்பாளரின் விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர். தம்பதியினர் இந்த நிதிக்கு 2 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததையும் குறிப்பிட்டனர். 


Also Read | Venkaboys: ராகுல் டிராவிட்டின் கோப அவதாரம், காரணம் இதுதான்…


"கோவிட் -19 பரவத் தொடங்கியதில் இருந்து, நம் நாடு கடுமையான கால கட்டத்தை எதிர்கொண்டுள்ளது. நமது சுகாதார அமைப்புகளுக்கு சவால் எழுந்துள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது இந்தியாவுக்கு உதவ வேண்டும்" என்று கோஹ்லி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் எழுதினார். 


"அனுஷ்காவும் நானும் கெட்டோவில் (Ketto) கோவிட் -19 நிவாரண நிதி திரட்டுவதற்காக ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினோம், உங்கள் ஆதரவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். உயிர்களைக் காப்பாற்ற எவ்வளவு நன்கொடை கொடுத்தாலும் அது அளவில் மிகவும் குறைந்ததே."


"COVID-19 க்கு எதிரான போரை நாம் அனைவரும் ஒன்றாக இருந்தால்" வெல்ல முடியும் என்று தங்கள் ரசிகர்களுக்கு உறுதியளித்த கோஹ்லி மற்றும் அனுஷ்கா "தங்கள் இயக்கத்தில் இணைய வேண்டும்" என்று வலியுறுத்தினர்.


Also Read | Stop Rumors: CT Scan கதிர்வீச்சு மிகவும் லேசானது, புற்றுநோயை ஏற்படுத்தாது


"ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம், ஆனால் இதை எதிர்த்துப் போராட உங்கள் உதவி எங்களுக்குத் தேவை. எங்கள் இயக்கத்தில் நீங்கள் அனைவரும் சேர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நமது நாட்டைப் பாதுகாப்பாகவும் வலுவாகவும் வைத்திருக்க எங்கள் பங்கைச் செய்வோம். நன்றி. இந்த பதிவில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்" என தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கோஹ்லி எழுதினார்.


முன்னதாக, கோஷிட் -19 க்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் கணவர் கோலியுடன் இணைந்து ஒரு "இயக்கத்தை" தொடங்குவதாக அனுஷ்கா கோலி சமூக ஊடகங்களில் அறிவித்திருந்தார்.


"இந்தியாவுக்கு கொரோனா பரவல் மிகவும் கடினமாக இருக்கிறது, மேலும் நம் நாடு இப்படி பாதிக்கப்படுவதைப் பார்க்கும்போது எங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது" என்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வீடியோவில் அனுஷ்கா தெரிவித்துள்ளார்.


Also Read | Vaccine Tours: அமெரிக்காவுக்கு தடுப்பூசி சுற்றுலா போவதன் பின்னணி தெரியுமா?


கோவிட்-19 நிவாரண நிதியை திரட்டும் தங்கள் முயற்சிக்கு ஆதரவும், நிதியும் வழங்குமாறு ரசிகர்களைக் கேட்டுக் கொண்ட அனுஷ்கா, "நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய விஷயமும், கண்டிப்பாக ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும்" என்றார்.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வழிநடத்திய கோஹ்லி இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிரடியாகக் விளையாடினார்.


ஐ.பி.எல் அணிகளில் பல வீரர்களுக்கு கோவிட் -19 பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டித்தொடர் காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.


Also Read | CSK வீரர்கள் அனைவரும் கிளம்பிய பிறகே தோனி ராஞ்சிக்கு செல்வார்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR