Stop Rumors: CT Scan கதிர்வீச்சு மிகவும் லேசானது, புற்றுநோயை ஏற்படுத்தாது

சி.டி ஸ்கேன் கதிர்வீச்சு மிகவும் லேசானது, புற்றுநோயை ஏற்படுத்தாது என்று இந்திய கதிரியக்க மற்றும் இமேஜிங் அசோசியேஷன் (Indian Radiological & Imaging Association) கேட்டுக் கொண்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 5, 2021, 11:10 PM IST
  • CT Scan கதிர்வீச்சு மிகவும் லேசானது, புற்றுநோயை ஏற்படுத்தாது
  • வதந்திகளை பரப்பாதீர்கள் என ஐ.ஆர்.ஐ.ஏ கேட்டுக் கொண்டுள்ளது
  • வதந்திகளை பரப்புவதால் மக்களிடையே தேவையற்ற மன அழுத்தம் ஏற்படுகிறது
Stop Rumors: CT Scan கதிர்வீச்சு மிகவும் லேசானது, புற்றுநோயை ஏற்படுத்தாது title=

புதுடெல்லி: சி.டி ஸ்கேன் கதிர்வீச்சு மிகவும் லேசானது, புற்றுநோயை ஏற்படுத்தாது என்று இந்திய கதிரியக்க மற்றும் இமேஜிங் அசோசியேஷன் (Indian Radiological & Imaging Association) கேட்டுக் கொண்டுள்ளது.

வதந்திகளை பரப்பாதீர்கள் என்று இந்திய கதிரியக்க மற்றும் இமேஜிங் அசோசியேஷன் (ஐ.ஆர்.ஐ.ஏ), கேட்டுக் கொண்டுள்ளது. நாட்டில் கோவிட் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுப்பதும், மருத்துவ வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் போராடி வரும் நிலை இருக்கிறது.

இதுபோன்ற இக்கட்டான நிலையில், உரிய விவரங்கள் தெரியாமல் வதந்திகளை பரப்புவதால் மக்களிடையே தேவையற்ற மன அழுத்தம் ஏற்படுகிறது. தற்போது  கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராபி சி.டி ஸ்கேன் (Computerized Tomography CT Scans) தீங்கு விளைவிப்பதாக வதந்திகள் உலா வருகின்றன.

Also Read | மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50000 கோடி

ஒரு சி.டி. ஸ்கேன் எடுப்பது 300-400 எக்ஸ்-ரேக்களுக்கு சமம் என்று டாக்டர் எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறிய கருத்து சரியானதல்ல என்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  

Dr.குலேரியாவின் கூற்றின்படி, சிடி ஸ்கென்கள் எடுப்பது புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிப்பதாக கூறுவது இன்றைய நிலையில் காலாவதியான கருத்து  என்று இந்திய கதிரியக்க மற்றும் இமேஜிங் அசோசியேஷன் (ஐ.ஆர்.ஐ.ஏ) குறிப்பிட்டுள்ளது. 

ஒரு சி.டி-ஸ்கேன் 300-400 எக்ஸ்-கதிர்களின் கதிர்வீச்சு வெளிப்பாட்டிற்கு சமமாக இருப்பது கடந்த காலத்தின் ஒரு விஷயம் (குறைந்தது 30-40 ஆண்டுகளுக்கு முன்பு). தற்போது அதி நவீன குறைந்த டோஸ் கொண்ட சி.டி ஸ்கேனர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை 5-10 எக்ஸ்-கதிர்களுடன் ஒப்பிடக்கூடிய கதிர்வீச்சை வெளியிடுகின்றன என்று இந்த அறிக்கை கூறுகிறது.

Also Read | ஏழு குழந்தைகளை கருதரித்த பெண் பெற்றெடுத்தது 9 குழந்தைகளை!

கோவிட் -19 நோயாளிக்கு மார்பு சி.டி ஸ்கேன் செய்யும் போக்கு இருப்பதாக டாக்டர் குலேரியா கூறியிருந்தார். லேசான கோவிட் -19 பாதிப்பு உள்ளவர்கள், ஆக்ஸிஜன் செறிவு இயல்பானதாக இருந்தால், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டால் போதும், இதுபோன்ற சி.டி ஸ்கேன் எந்த நோக்கத்திற்கும் பயன்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். 

ஆர்.டி-பி.சி.ஆர் சோதனையில் கொரோனா இல்லை என்று தெரியவந்தாலும், ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. காரணம், முதல் அலையில் வந்த கொரோனா வைரஸின் பிறழ்ந்த வைரஸ், தொழில்நுட்ப பிழைகள் என பல்வேறு காரணிகளால் இரண்டாம் அலை கொரோனா இருப்பதை பரிசோதனைகள் காட்டுவதில்லை. 

Also Read | Vaccine Tours: அமெரிக்காவுக்கு தடுப்பூசி சுற்றுலா போவதன் பின்னணி தெரியுமா?

அந்த சூழ்நிலையில் மார்பு சி.டி ஸ்கேன் கொரோனா இருப்பதைக் கண்டறிய உதவுகிறது இதனால் கொரோனா வைரஸ் பிற நபர்களுக்கு பரவுவதைத் தடுக்கிறது. ஆர்டி-பி.சி.ஆருக்கு மாறாக, மார்பு சி.டி ஸ்கேன் எடுக்கும்போது முடிவுகள் துரிதமாக கிடைத்து விடுகிறது.  

அறிகுறி உள்ள நோயாளிகளில் கோவிட் -19 நோய்த்தொற்றின் தீவிரத்தை அடையாளம் காண மார்பு சி.டி ஸ்கேன் உதவுகிறது என்று இந்திய கதிரியக்க மற்றும் இமேஜிங் அசோசியேஷன் கூறுகிறது. ஒரு நோயாளி வீட்டுத் தனிமையில் இருக்கலாமா அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளறதா என்பதை தீர்மானிக்க சி.டி ஸ்கேன் உதவுகிறது. " 

Also Read | தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News