ICC WTC Final: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது சிறந்த பேட்டிங்கிற்காக உலகம் முழுவதும் பிரபலமானவர். அவர் பேட்டிங் செய்ய கிரீசுக்கு வந்தாலே, ​​எதிரணி பந்து வீச்சாளர்களின் இதயத்தில் அச்சம் ஏற்படுகிறது. ஆனால் விராட் கோலி பந்து வீசினால் எப்படி இருக்கும்? அவர் பந்துவீசுவதை நீங்கள் எப்போதாவது பார்த்துள்ளீர்களா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பந்து வீசியபடி காணப்பட்டார் கோலி 


விராட் கோலி (Virat Kohli) பந்துவீச்சில் பிரபலமானவர் அல்ல. ஆனால் ஜூன் 12 ஆம் தேதி, அவர் ஒரு சிறப்பு வகையான பந்துவீச்சு பயிற்சியை மேற்கொண்டார். பி.சி.சி.ஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் கே.எல்.ராகுலுக்கு கிங் கோலி பந்து வீசுகிறார்.


இன்ட்ரா ஸ்க்வாட் மேட்ச்சில் இந்த பயிற்சி நடந்தது


ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு (ICC World Cup Final) முன்னர் இந்திய கிரிக்கெட் அணி சவுத்தாம்ப்டனில் ஒரு இண்ட்ரா ஸ்வாட் போட்டியில் விளையாடியது. நியூசிலாந்திற்கு எதிரான உண்மையான மோதலுக்கு முன்னர் இது ஒரு பயிற்சியாக பார்க்கப்படுகின்றது. 




ALSO READ: ICC Test Ranking: 5-வது இடத்தில் விராட் கோலி, முதலிடத்தில் யார்?


கோஹ்லி பகுதி நேர பந்து வீச்சாளராக மாறினார் 


இந்த வீடியோ வெளிவந்த பிறகு, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நியுசிலாந்து அணிக்கு எதிராக பந்து வீசுவதைக் காண முடியுமா என்ற கேள்வி எழுகிறது. டெஸ்ட் போட்டியின் போது, ​​அவர் ஒரு பகுதி நேர பந்து வீச்சாளராக மாற வாய்ப்புள்ளது. இதனால் முழுநேர பந்து வீச்சாளர்களுக்கு சிறிது ஓய்வு கிடைக்கக்கூடும். 


பகுதி நேர பந்து வீச்சாளரின் நன்மைகள்


பகுதி நேர பந்து வீச்சாளருக்கான செயலுத்தி நியூசிலாந்து அணிக்கு (New Zealand) எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடும். ஏனெனில் புதிய பந்து வீச்சாளரின் பந்தைப் புரிந்து கொள்வதில் எதிரணியின் பேட்ஸ்மேன்கள் தவறு செய்யக்கூடும். இதன் காரணமாக இந்தியா தேவையான விக்கெட்டுகளை எளிதாகப் பெற முடியும். இது தவிர, முக்கிய பந்து வீச்சாளர்களுக்கு சிறிது நேரம் ஓய்வும் கிடைக்கும். இதனால், அவர்கள் நாள் முழுவதும் திறம்பட பந்து வீச முடியும்.


ALSO READ: Virat Kohli-யின் மிகப்பெரிய ரசிகராம் இந்த WWE Superstar: வைரலாகும் போஸ்ட்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR