Virat Kohli-யின் மிகப்பெரிய ரசிகராம் இந்த WWE Superstar: வைரலாகும் போஸ்ட்

உலகம் முழுவதும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். அமெரிக்க மல்யுத்த வீரர் ஜான் சீனா கேப்டன் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகராவார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 11, 2021, 10:00 PM IST
  • இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, உலகின் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்.
  • அமெரிக்க மல்யுத்த வீரர் ஜான் சீனா இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகர்.
  • 2019-ல் ஜான் சீனா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் கோலியின் படத்தை பகிர்ந்தார்.
Virat Kohli-யின் மிகப்பெரிய ரசிகராம் இந்த WWE Superstar: வைரலாகும் போஸ்ட் title=

புதுடெல்லி: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, உலகின் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு அவர் முன்மாதிரியாக இருக்கிறார். வாழ்க்கையில் விடா முயற்சியால் எவ்வளவு பெரிய உயரத்தையும் அடையலாம் என்பதையும் திறமையில் கவனம் செலுத்தி இலக்கை நோக்கி பயணித்தால் வெற்றி நிச்சயம் என்பதையும் அவர் இளைஞர்களுக்கு தன் வாழ்க்கை மூலம் உணர்த்தியுள்ளார்.

ஜான் சீனா விராட் கோலியின் ரசிகர்

அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர் ஜான் சீனா (John Cena) இந்திய அணியின் (Team India) கேப்டன் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகராவார். இதை அவர் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார். 2019 ஜூலை 7 ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் கோலியின் படத்தை பகிர்ந்தார். ஆனால் அவர் அதில் எதையும் எழுதவில்லை. 
 
ALSO READ: Vegan Diet: வேகன் உணவுமுறைக்காக ட்ரோலாகும் விராட் கோலி, காரணம் என்ன?

ஜான் சீனாவின் பழைய பதிவு வைரலாகிறது

உலக மல்யுத்த போட்டியின் (WWE) சூப்பர் ஸ்டார் ஜான் சீனாவின் இந்த பழைய பதிவு சமூக ஊடகங்களில் வேகமாக வைரல் (Viral Post) ஆகி வருகிறது. ஜான், விராட் கோலியின் இந்த படத்தின் மூலம் அனைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by John Cena (@johncena)

உலகக் கோப்பை 2019-யின் புகைப்படம்

தற்போது வைரல் ஆகி வரும் விராட் கோலியின் இந்த புகைப்படம் இங்கிலாந்தில் நடைப்பெற்ற ஐ.சி.சி உலகக் கோப்பை 2019 இல் (ICC World Cup 2019) எடுக்கப்பட்ட புகைப்படமாகும். இந்த புகைப்படத்தில் விராட் கோலியுடன் ரோஹித் சர்மா, குல்தீப் யாதவ் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரும் காணப்படுகிறார்கள்.

விராட் கோலிக்கு (Virat Kohli) உலகம் முழுவதும், கிரிக்கெட் விளையாட்டில் மட்டுமல்லாமல் மற்ற விளையாட்டுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். ஆனால், மற்றொரு விளையாட்டின் சூப்பர் ஸ்டாரே கோலியின் ரசிகராக இருப்பது விராட் கோலியின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ALSO READ: கோலி கூறிய இந்த வார்த்தை, தோனி - கோலி ரசிகர்கள் நெகிழ்ச்சி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News