West Indies vs India: மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளை விளையாட உள்ளது. இதில், முதல் டெஸ்ட் போட்டி கடந்த 12ஆம் தேதி டொமினிகாவில் தொடங்கியது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில், டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் கேப்டன் கிரேக் பிராத்வைட் பேட்டிங் செய்தார். இருப்பினும், மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங்கில் சொதப்பியது. அந்த அணி 150 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக அலிக் அத்தானாஸ் 47 ரன்களை சேர்த்தார். இந்திய பந்துவீச்சில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், சிராஜ், ஷர்துல் தாக்கூர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 


முதல் நாளிலேயே மேற்கு இந்திய தீவுகள் ஆட்டமிழந்த பின்னர், இந்திய அணி ஓப்பர்களான ரோஹித் - ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 80 ரன்கள் வரை சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதன்படி, ஜெய்ஸ்வால் 40 ரன்களுடனும், ரோஹித் 30 ரன்களுடனும் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். 


இருவரும் சதம் அடித்து 239 ரன்கள் சேர்த்த நிலையில், ரோஹித் சர்மா 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கில் 6 ரன்களில் ஆட்டமிழக்க, ஜெய்ஸ்வாலுடன், விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நேற்றைய இரண்டாம் நாள் முடிவில் வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜெய்ஸ்வால் தற்போது 143 ரன்களுடனும், விராட் கோலி 30 ரன்களுடனும் தற்போது ஆட்டமிழக்காமல் உள்ளனர்.  


மேலும் படிக்க | 91 வருட வரலாற்றில் இந்தியா புதிய சாதனை... பட்டையை கிளப்பிய ரோஹித் - ஜெய்ஸ்வால் காம்போ!


நேற்றைய ஆட்டத்தின் போது , ஸ்டம்ப் மைக்கில், ‘பட்டா ஃபெங்க் ரஹா ஹை’ என்று விராட் சொல்வது கேட்டது. ஆல்ரவுண்டரும் ஆஃப் ஸ்பின்னருமான ரஹ்கீம் கார்ன்வால் களத்தில் இருந்து வெளியேறியதால், இந்திய இன்னிங்ஸின் 48ஆவது ஓவரில் மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் கிரேக் பிராத்வைட் வேறு வழியின்றி பந்துவீச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிராத்வைட் ஆஃப் ஸ்பின் பந்துகளை வீசினார். மெதுவாகத் திரும்பும் இந்த ஆடுகளத்தில் பயனளிக்கக் கூடியதாக அமைந்தது.


அப்போதுதான் கோலி தனது பார்ட்னரிடம் இந்தியில் பேசுவது ஸ்டம்ப் மைக்கில் கேட்டது, "பட்டா ஃபெங்க் ரஹா ஹை", அதாவது 'செங்கற்களை வீசுகிறார்' என்று அர்த்தம் என கூறப்படுகிறது. அதாவது, இது பிராத்வைட் முறையாக பந்துவீசாமல் கையை மடக்கி ஏறிகிறார் (Chuckking) என்று பொருள்பட கூறியுள்ளார். 


2019ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பிராத்வைட்டின் பந்துவீச்சு சந்தேகத்திற்குரியதாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) செப்டம்பர் 2019இல் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் கிரெய்க் பிராத்வைட்டின் பந்துவீச்சு சட்டபூர்வமானது என்று கண்டறியப்பட்டது. 


செப்டம்பர் 2 ஆம் தேதி கிங்ஸ்டனில் முடிவடைந்த இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர் பிராத்வைட் சட்டவிரோத பந்துவீச்சு நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதன்பிறகு செப்டம்பர் 14ஆம் தேதி லஃபரோவில் அவர் பந்துவீச்சு மதிப்பீட்டை மேற்கொண்டார். அவரது அனைத்து பந்துகளுக்கும் முழங்கை நீட்டிப்பு ஐசிசி சட்டவிரோத பந்துவீச்சு விதிமுறைகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட 15 டிகிரி சகிப்புத்தன்மைக்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டது.


மேற்கிந்தியத் தீவுகள் அணி கேப்டன் பிராத்வைட் இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 51.65 என்ற சராசரியில் 29 விக்கெட்டுகளை 6/29 என்ற சிறந்த ஆட்டத்துடன் எடுத்துள்ளார். இதற்கிடையில், டொமினிகாவில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இன்னிங்ஸின் போது கோலி குறிப்பாக கவனத்துடன் இருந்தார்.


அவர் சந்தித்த 81ஆவது பந்தில் தான் தனது முதல் பவுண்டரியை கோலி அடித்தார். அந்த பவுண்டரியை அடித்துவிட்டு அவர் வேற லெவலில் கொண்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டி20 போட்டிகளில் 4,000 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே பேட்டர் கோலி, டெஸ்ட் போட்டிகளில் 8,515 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 12,898 ரன்களும் எடுத்துள்ளார். 


டொமினிகாவில் 2வது நாளில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தனது சிறிய கேமியோ மூலம் இந்திய பேட்டர் வரலாற்றை எழுதினார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக ரன் குவித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார். பிரபல இந்திய தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்கை (8,503) விராட் கோலி அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் முந்தியுள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (15,921), ராகுல் டிராவிட் (13,265), சுனில் கவாஸ்கர் (10,122), விவிஎஸ் லட்சுமண் (8,781) ஆகியோருக்கு பின் கோலி மட்டுமே உள்ளார்.


மேலும் படிக்க | கிரிக்கெட்டரை மட்டுமல்ல அவரது அப்பாவையும் அவுட்டாக்கிய பெளலர்கள் பட்டியல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ