கோலி கூறிய இந்த வார்த்தை, தோனி - கோலி ரசிகர்கள் நெகிழ்ச்சி!
தோனியுடனான நட்பு குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு விராட் கோலி பதிலளித்துள்ளது வைரலாகி வருகிறது
இந்தியா (Team India) மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (ICC World Test Championship Final) இறுதிப்போட்டி இங்கிலாந்தில் ஜூன் 18 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையில் கேப்டன் விராட் கோலி (Virat Kohli) , மட்டும் தோனியுடனான நட்பை இந்நேரத்தில் நினைவுக்கூர்ந்துள்ளார். விராட் கோலி மற்றும் தோனி (M S Dhoni) ஆகியோர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கிய பெயர்கள் ஆவர். இந்நிலையில் விராட் கோலி தல தோனி குறித்து நெகிழ்ச்சியான ஒரு வார்த்தையை கூறியுள்ளார்.
ALSO READ | கப்பு முக்கியம் கோலி, ஆக்ரோஷம் அல்ல ஆதிக்கம் தேவை: கோலிக்கு கபில் தேவின் WTC அறிவுறை
கோலி தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக பிசிசிஐ சார்பில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பயோபபுளில் உள்ளார். ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இதிலும், எந்த பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக 14 நாட்கள் தனிமையில் (Quarantine) இருக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் விராட் கோலி, நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உறையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் தோனி குறித்து சுருக்கமாக சொல்லுங்கள் என கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த கோலி,
நம்பிக்கை மற்றும் மரியாதை என்றால் அது தோனி தான் எனக்கூறினார். தோனியின் இந்த பதிலால் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது இந்த பதிலானது இணையத்தில் வைரலாக உலாவி வருகிறது.
விராட் கோலி (Virat Kohli) தனது சர்வதேச வாழ்க்கையை இலங்கைக்கு (Sri Lanka) எதிராக 2008 ஆகஸ்ட் 18 அன்று எம்.எஸ். தோனியின் (MS Dhoni) தலைமையில் தொடங்கினார். அதே நேரத்தில், 2019 உலகக் கோப்பையில் (World Cup 2019) நியூசிலாந்திற்கு (New Zealand) எதிராக தோனி தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடியபோது, டீம் இந்தியாவின் (Team India) கேப்டனாக கோலி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR