கடந்த ஒரு வருடமாக காயம் அடையாத இந்திய வீரர் யார் தெரியுமா?
உலகக் கோப்பை டி20 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
டி20 உலக கோப்பை 2022 போட்டி அக்டோபர் 16 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தகுதி சுற்று போட்டிகள் முடிந்த பின்னர் லீக் போட்டிகள் ஆரம்பம் ஆகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 23ஆம் தேதி முதல் போட்டியில் மோதுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடன் சொந்த நாட்டில் விளையாடி முடித்த பின்னர் தற்போது இந்திய அணி ஆஸ்திரேலிய சென்றுள்ளது. அங்கு இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது. காயம் காரணமாக விலகிய பும்ராவிற்கு பதிலாக ஷமி அணியில் இடம் பெற்றுள்ளார்.
மேலும் படிக்க | பிசிசிஐ-ல் இருந்து வெளியேறிய பிறகு சவுரவ் கங்குலி எடுத்த முக்கிய முடிவு!
உலகக் கோப்பை போட்டியில் சிறந்த வீரர்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஒரு வருடமாகவே பிசிசிஐ பல்வேறு புதிய வீரர்களை அணியில் அறிமுகம் செய்தது. காரணம் கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்தியா படு தோல்வியை சந்தித்தது, இதன் காரணமாக இந்த ஆண்டு கோப்பையை வெல்ல சிறப்பான அணியை தேர்வு செய்ய முயற்சித்தது. ஆனாலும் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து காயத்தில் அவதிப்பட்டு வந்தனர். ரோகித் சர்மா, கே எல் ராகுல், அஜின்கே ரகானே, பும்ரா, பந்த், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, தவான், ஷமி, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், சூரியகுமார் யாதவ், தீபக் சாஹர் என பல வீரர்கள் கடந்த ஓராண்டாக அடிக்கடி காயம் ஏற்பட்டு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களை தவிர மேலும் சில வீரர்களும் இங்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். இவர்களின் அனைவரும் தற்போது குணமடைந்திருந்தாலும் பும்ரா மற்றும் ஜடேஜா காயம் காரணமாக உலக கோப்பை அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் கடந்த ஓராண்டாக காயமடையாத வீரரை பற்றிய விவரத்தை பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதில் விராட் கோலி மட்டுமே கடந்த ஓர் ஆண்டாக காயமடையாத வீரர் என்று குறிப்பிட்டுள்ளது. பார்மில் இல்லாமல் சிரமப்பட்டு வந்த விராட் கோலி தற்போது மீண்டும் தனது பழைய பார்மிற்கு திரும்பியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ