'விராட் கோலியை பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்' - டிரெண்டிங்கால் கொந்தளித்த ரசிகர்கள் - ஏன் தெரியுமா?

தமிழ்நாட்டில் 21 வயதான கிரிக்கெட் ரசிகர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், இந்திய வீரர் விராட் கோலியை கைது செய்ய வேண்டும் என ட்விட்டரில் டிரெண்டனது.  

Written by - Sudharsan G | Last Updated : Oct 15, 2022, 06:46 PM IST
  • #ArrestKohli டிரெண்டிங்கிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பு.
  • விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஆஸ்திரேலியாவில் உள்ளனர்.
'விராட் கோலியை பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்' - டிரெண்டிங்கால் கொந்தளித்த ரசிகர்கள் - ஏன் தெரியுமா? title=

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னர், கிரிக்கெட் ரசிகர்கள் இருவரிடையே  குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரின் ரசிகர்கள் என கூறப்படும் நிலையில், இருவருக்கும் இடையே அவர்களுக்கு பிடித்த வீரர்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. அதாவது, ஐபிஎல் தொடரில் விராட் - ரோஹித் விளையாடும் பெங்களூரு - மும்பை அணியின் தீவிர ரசிகர்களாகவும் அவர்கள் இருந்துள்ளனர். 

அந்த தகராறில், விராட் கோலி ரசிகர், ரோஹித் சர்மா ரசிகரை கொலை செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கைதுசெய்யும்படி ட்விட்டரில் இன்று காலை சிலர் டிரெண்ட் செய்தனர். 

மேலும் படிக்க | ஜார்க்கண்ட் அணியுடன் தோனி: கிரிக்கெட் களத்தில் பார்க்க ரசிகர்கள் உற்சாகம்

குறிப்பாக, ரோஹித் சர்மா ரசிகர்கள் #ArrestViratKohli என்ற ஹாஷ்டேகில் டிரெண்ட் செய்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து, கோலி ரசிகர்கள் உள்ளிட்ட கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இந்த டிரெண்டை எதிர்த்து தற்போது பதிவிட்டு வருகின்றனர். அதாவது, தமிழ்நாட்டில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் கொலைக்கு, கிரிக்கெட் வீரர்கள் எப்படி பொறுப்பேற்கும் முடியும் என கேள்வியெழுப்பியுள்ளனர். 

மேலும், அடிப்படை அறிவற்ற சிலரே இதுபோன்று டிரெண்ட் செய்து வருவதாகவும் ஒரு ட்விட்டர் பயனர் பதிவிட்டிருந்தார். இந்த வகையிலான டிரெண்டிங் வேடிக்கையாக இருக்கிறது என்றும், குடிபோதையில் நடந்த தகராறுக்கு கோலியை குறைச்சொல்வது எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

விராட் கோலி, ரோஹித் சர்மா ரசிகர்களுக்கு இடையே இதுபோன்ற ட்விட்டர் சண்டைகள் வழக்கம்தான். இவர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், கால்பந்து ரசிகர்கள், சினிமா ரசிகர்கள் தங்களுக்கு உடன்படாத நபர்கள் மீது ட்விட்டரில் அவதூறுகளை அள்ளி வீசுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.   

மேலும் படிக்க | ’என்னென்ன கார் வைத்திருக்கிறீர்கள்’ ரோகித் சர்மா கேட்ட கேள்வி; பாபர் அசாம் ரியாக்ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News