Gautam Gambhir: விராட் கோலி ஒரு மோசமான கேப்டன் அல்ல, ஆனால் ரோஹித் சர்மா சிறந்தவர்
விராட் கோலி ஒரு மோசமான கேப்டன் அல்ல, ஆனால் ரோஹித் சர்மா சிறந்தவர் என்று கெளதம் கம்பீர் தெரிவித்திருக்கும் கருத்து வைரலாகிறது. விராட் கோலி, தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன். அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அவரே கேப்டனாக இருக்கிறார். ஆனால் கேப்டன் பதவி அவருக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையில் அவ்வப்போது மாற்றி கொடுக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுகின்றன.

விராட் கோலி ஒரு மோசமான கேப்டன் அல்ல, ஆனால் ரோஹித் ஷர்மாவுடன் ஒப்பிடும்போது, அவர் இரண்டாவது இடத்தில் தான் இருப்பார் என்று இந்தியாவின் முன்னாள் தொடக்க வீரர் கெளதம் கம்பீர் கூறுகிறார். இந்த மாத தொடக்கத்தில் தான் தலைமை தாங்கிய மும்பை இந்தியன்ஸை ஐபிஎல் போட்டித்தொடரில் வெல்லச் செய்த ரோஹித் ஷர்மாவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்னம் இருக்கின்றன. அத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் T20 போட்டிகளுக்கான பொறுப்பை ரோஹித்திடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதா என்பது குறித்து ஒரு பரபரப்பான விவாதம் நடந்து வருகிறது.
"விராட் ஒரு மோசமான கேப்டன் அல்ல, ஆனால் இங்கே விவாதம் என்னவென்றால், யார் ஒரு சிறந்த கேப்டன், அது ரோஹித் சர்மா. மேலும், அவர்களுக்கு இடையேயான வித்தியாசம் மிகப் பெரியது ”என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டட் (Cricket Connected)நிகழ்ச்சியில் கம்பீர் கூறினார்.
ஆனால், இந்தியாவின் மற்றொரு முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கம்பீரின் கருத்தில் இருந்து மாறுபடுகிறார். இது தலைமையை மாற்றுவதற்கான நேரம் இல்லை. அதுமட்டுமல்ல, கோலி இந்திய கேப்டனாகவும் பெரிதாக தவறு செய்யவில்லை என்கிறார் சோப்ரா.
“இப்போது மாற்றங்களுக்கான நேரம் அல்ல. புதிய அணியை உருவாக்க உங்களுக்கு நேரமில்லை. நீங்கள் புதிய பணி நெறிமுறைகள் அல்லது புதிய தத்துவங்களைப் பயன்படுத்த விரும்பினால், விளையாட்டுகள் அதிகம் இருக்க வேண்டும். அடுத்த டி 20 உலகக் கோப்பைக்கு முன்பு நீங்கள் 5-6 டி 20 போட்டிகளில் விளையாடும் நிலையில் அணியின் தலைமையில் மாற்றம் செய்யத் தேவையில்லை” என்று சோப்ரா வாதிட்டார்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், ஆன்மீகம், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான
செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR