அன்று களை எடுப்பாளர், இன்று ஆஸ்திரேலியாவின் மிக வெற்றிகரமான spinner @Nathan Lyon

இன்று, நாதன் லியோன் (Nathan Lyon) தனது 33 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார், ஒரு காலத்தில் நிலத்தில் களையெடுக்கும் ஊழியராக பணியாற்றிய இந்த பந்து வீச்சாளர் பல சாதனைகளைச் செய்துள்ளார்.  உழைப்பால் உயர்ந்த Nathan Lyon அவர்களுக்கு Happy birthday வாழ்த்துகள்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 20, 2020, 04:55 PM IST
  • நாதன் லியோன் தனது 33 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்
  • லியோன் முன்பு நிலத்தில் களையெடுத்தார்
  • ன்று ஆஸ்திரேலிய அணியின் மிக வெற்றிகரமான பந்து வீச்சாளராக உயர்ந்திருக்கிறார்
அன்று களை எடுப்பாளர், இன்று ஆஸ்திரேலியாவின் மிக வெற்றிகரமான spinner @Nathan Lyon title=

மெல்போர்ன்: இன்று ஆஸ்திரேலியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியோன் (Nathan Lyon)  தனது 33 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். நாதன் இன்று ஆஸ்திரேலிய அணியின் மிக வெற்றிகரமான பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருக்கிரார். ஆனால் அவர் காலத்தில் களத்தில் களை எடுக்க்கும் பணிபுரிந்த அவர் தனது திறமையால் உலகம் புகழும் பந்து விச்சாளராக உயர்ந்து விட்டார். தனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன், இந்த வீரர் தனது விதியை மாற்றி எழுதினார்.

இன்று, நாதன் லியோன் தனது பந்தால் பெரிய பேட்ஸ்மேன்களை ஈர்க்கும் இதே மைதானத்தில், ஒரு காலத்தில் அவர் அங்கு புல் வெட்டிக் கொண்டிருந்தார். ஆமாம், Nathan Lyon நாதன் அடிலெய்டில் புல் வெட்டும் தொழிலாளியாக் பணி புரிந்தார்.  

2011 ல் இலங்கைக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியில் நாதன் லியோனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் நாதன்.  'என் அதிர்ஷ்டத்தை என்னால் நம்ப முடியவில்லை. அதிர்ஷ்டத்தால் கிடைத்த இந்த வாய்ப்பை வீணாக்க மாட்டேன்.  பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் வளர்ந்து தனது நாட்டிற்காக விளையாடுவேன் என்றும் தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று கனவு காண்கிறது.  இலங்கை சுற்றுப்பயணம் எனக்கு ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும்” என்று நாதன் அப்போது தெரிவித்திருந்தார்.

லியோன் இதுவரை 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், இதில் அவர் 390 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், இது எந்த ஆஸ்திரேலிய ஆஃப் ஸ்பின்னரின் அதிகபட்ச விக்கெட்டாகும்.  இந்திய சுற்றுப்பயணத்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் அவர் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய கிரிக்கெட்டர் என்ற பெருமையையும் பெற்றுவிடுவார்.  

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய 10 வது வீரராக லியோன் இருப்பார், இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பிரிஸ்பேனில் இந்தியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்டில் நடக்கும்.

 'நான் இன்னும் சிறப்பாக வருவேன் என்று உணர்கிறேன், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் என்னால் நிறைய பங்களிக்க முடியும் என்று நான் இன்னும் நம்புகிறேன்' என்று உறுதியாக கூறுகிறார் லியோன்.

'நிச்சயமாக நான் 500 மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளைப் எடுப்பேன்' என்று லியோன் கூறினார்.

மூத்த சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியோன் இந்த ஆண்டு ஜனவரியில் தனது கடைசி டெஸ்டில் விளையாடினார், அதன் பிறகு கோவிட் -19 உலகம் முழுவதும் கிரிக்கெட்டையும் முடக்கிவிட்டது. கோவிட் நோயால் உருவான இடைவெளி, கிரிக்கெட் விளையாடும் தனது ஆர்வட்தை அதிகமாக்கியிருப்பதாகவும், மேலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற தனது பசியை அதிகரித்துள்ளது என்றார்.

அவர், 'ஒருவேளை, இந்த இடைவெளி) விளையாட்டிற்கான எனது தொடர்பை அதிகரித்துள்ளது' என்றும் லியோன் கூறுகிறார்.

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஒருநாள் மற்றும் டி 20 தொடர் நவம்பர் 27 முதல் தொடங்கவிருக்கிறது. அதன் பிறகு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறும், இது அடிலெய்டில் டிசம்பர் 17 முதல் பகல் இரவு போட்டியாக நடைபெறும்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News