இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி மீண்டும் ICC டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் வெளியிடப்பட்ட ICC டெஸ்ட் ஆண்கள் தரவரிசை பட்டியலின் படி, 928 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி தரவரிசை பட்டியலில் முதல் இடம்பிடித்துள்ளார். இவரைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவன் ஸ்மித் 923 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.


ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் ஸ்டீவன் ஸ்மித் கடந்த செப்டம்பர் மாதம், இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேனை ICC டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முந்தினார். இந்நிலையில் தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் விராட் கோலி மீண்டும் தனது முதலிடத்தை மீட்டெடுத்துள்ளார்.


இவர்களை தொடர்ந்து 877 புள்ளிகளுடன் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 3-ஆம் இடத்திலும், 764 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்ணர் ஆகியோர் உள்ளனர். இப்பட்டியலில் இவர்களை தவிர இந்திய வீரர்கள் புஜாரா (791 புள்ளிகளுடன் 4-ஆம் இடத்தில்), ரஹானே (759 புள்ளிகளுடன் 6-வது இடத்தில்) ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளனர். 


அதேவேளையில் வங்கதேசத்திற்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற இந்தியா அணி டெஸ்ட் அணிக்கான தரவரிசைப் பட்டியலில் 120 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியாவை தொடர்ந்து நியூசிலாந்து 109 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்து 104 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்திலும, 102 புள்ளிகளை பெற்ற தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முறையே 4, 5-ஆம் இடங்களை பிடித்துள்ளன.


பந்துவீச்சாளர்களை பொருத்தவரையில்., ஆஸ்திரேலியாவின் பேட் கம்மீஸ் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கின்றார். இந்தியாவின் ஜாஸ்ப்ரீட் பூம்ரா 794 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்தில் உள்ளார். ரவிச்சந்திர அஸ்வின், மெகமது ஷமி முறையே 772, 771 புள்ளிகளுடன் 9-ஆம் மற்றும் 10-ஆம் இடத்தில் உள்ளனர்.


ஆல்-ரவுன்டருக்கான பட்டியலில் மேற்கிந்திய வீரர் ஜாசன் ஹோல்டர் 473 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கின்றார். இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா 406 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். ரவிச்சந்திர அஸ்வின் 308 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்தில் உள்ளார்.