Retirement: ஓய்வை அறிவிக்கும் விராட், ரோஹித், தோனி! இந்த ஆண்டு நடக்கும் முக்கிய மாற்றங்கள்!
கடந்த 2023ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டுக்கு முக்கியமான ஆண்டாக உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தோல்வி என முக்கிய நிகழ்வுகள் நடந்தது.
Virat Kohli, Rohit Sharma & MS Dhoni Retirement Updates in Tamil: இந்திய அணிக்கு கடந்த ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை என இரண்டு பெரிய போட்டிகளிலும் இறுதிப் போட்டியை எட்டிய போதும், கோப்பையை வெல்ல தவறியது. இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. 2013 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்லவில்லை. இந்நிலையில், இந்த 2024ல் இந்திய கிரிக்கெட் அணி பல மாற்றங்களை எதிர்கொள்ள இருக்கிறது. 2024 ஆண்கள் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை எட்டும் முயற்சியில் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது.
மேலும் படிக்க | சச்சினை விட பெஸ்ட் பிளேயர் இவர் தான் என நினைத்த ஆஸ்திரேலிய அணி - ஏன் தெரியுமா?
2024ல் நடக்க இருக்கும் முக்கிய மாற்றங்கள்:
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் யார்?
ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ்க்கு திரும்பினார். இதனால் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி பறிக்கப்பட்டு அவருக்கு கொடுக்கப்பட்டது. இது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. ஜூன் மாதம் நடைபெறவுள்ள 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை யார் வழிநடத்துவது என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இதுவரை எந்தத் தெளிவையும் வழங்காததால், பெரிய குழப்பம் நீடித்து வருகிறது. 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பிறகு ரோஹித் இந்தியாவுக்காக ஒரு டி20 போட்டியில் கூட விளையாடவில்லை. இருப்பினும், 2023 உலகக் கோப்பையின் போது ஏற்பட்ட காயத்தால் ஹர்திக் வெளியேறினார்.
விராட் கோலியின் எதிர்காலம்
விராட் கோலி பல ஆண்டுகளாக டி20ல் இந்தியாவின் சிறந்த வீரராக இருந்து வருகிறார். 2014 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற T20 உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்த வீரராகவும், 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் சிறந்த ஆட்டநாயகன் (POTT) விருதையும் வென்றுள்ளார். இந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலக கோப்பைக்கான அணியில் அவர் இடம் பெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 2022 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு விராட் இந்தியாவுக்காக ஒரு டி20ல் கூட விளையாடவில்லை.
எம்எஸ் தோனியின் ஓய்வு
2023ல் சென்னை அணி ஐபிஎல் பட்டத்தை 5வது முறையாக வென்றது. 2023 ஐபிஎல் பொடியுடன் தோனி ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தோனி 2024 ஆம் ஆண்டில் மீண்டும் வருவேன் என்று உறுதியளித்தார். தோனி மிகச்சிறந்த கேப்டன் மட்டுமல்ல, மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன். 42 வயதில் தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி இதுவாக இருக்கலாம்.
மீண்டும் அணியில் ரிஷப் பந்த்
கார் விபத்துக்குள்ளான ரிஷப் பந்த் கடந்த ஒரு வருடமாக கிரிக்கெட் விளையாடவில்லை. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024 ஐபிஎல்-ல் பந்த் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்த் இந்திய அணிக்கு முக்கியமான வீரர், அவரது காயம் இந்தியாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | டெஸ்ட் முதல் டி20 உலக கோப்பை வரை! 2024ல் இந்திய அணி விளையாடும் போட்டிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ