வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி தனது கிரீடத்தில் மேலும் ஒரு புதிய இறகை சேர்த்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்திய அணியின் இன்றை வெற்றி, கேப்டனாக விராட் கோலி அதிக இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியர் எனும் பெருமையினை அடைய செய்தது. இன்றைய வெற்றி அவரது 10-வது இன்னிங்ஸ் வெற்றி ஆகும். 


இவருக்கு முன்னதாக இப்பட்டியிலில் மகேந்திர சிங் தோனி 9 வெற்றிகளுடனும், முகமது அசாருதீன் 8, சௌரவ் கங்குலி ஏழு வெற்றிகளுடன் இப்பட்டியிலில் இடம் பிடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி முதல் இடம் பிடித்துள்ளார்.


இந்நிலையில் இன்றைய போட்டியின் பிந்தைய விளக்க கூட்டத்தில் பங்கேற்று பேசிய கோலி., "எதிரணியை தங்களது பந்துவீச்சினால் திணறடித்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எனது நன்றி. மேலும் என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை," என்று தொரிவித்துள்ளார்.


---போட்டி விபரம்---


இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்து விளையாடியது. துவக்கம் முதலே இந்திய வீரர்களின் பந்துவீச்சில் திணறிய வங்கதேசம் ஆட்டத்தின் 58.3-வது பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே குவித்தது.



அணியில் அதிகப்பட்சமாக முஷபிர் ரஹிம் 43(105) ரன்கள் குவித்தார். இவருக்கு அடுத்த நிலையில் மொஹினுள் ஹாக்யூ 37(80) ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் மொகமது ஷமி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அஷ்வின், இஷான்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 


இதனைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்தியா தற்போது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. என்றபோதிலும் ஆட்டத்தின் 7.2-வது பந்தில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா 6(14) ரன்களுக்கு வெளியேறினார். இவரைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் அதிரடியாக விளையாடி 243(330) ரன்கள் குவித்தார். ரஹானே 86(172) ரன்கள் குவித்தார். அதேப்போல் ரவிந்திர ஜடேஜா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 60*(75) ரன்களுடன் களத்தில் இருந்தார்.


இதனைத்தொடர்ந்து ஆட்டத்தின் 114 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் குவித்தது. இதனையடுத்து ஆட்டத்தை டிக்ளர் செய்துக்கொள்வதாக அறிவித்தது. இதைனைத்தொடர்ந்து இரண்டவாது இன்னிங்ஸை துவங்கிய வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற துவங்கினர்.


ஆட்டத்தின் 69.2-வது பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி 213 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது. அணியில் அதிகப்பட்சமாக ரஹிம் 64(150) ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் மொஹமது சமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஷ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


இதனையடுத்து இந்தியா 1 இன்னிங்ஸ் மற்றும் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையான போட்டி வரும் 22-ஆம் நாள் டெல்லி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.