Virat Kohli டெஸ்ட் கேப்டனாக நீடிப்பாரா? அல்லது இவர் விராட் இடத்தைப் பெறுவாரா?
சர்வதேச கிரிக்கெட்டில், தற்போது உள்ள வீரரகளில் விராட் கோலி மிகச் சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு கேப்டனாக அவர் மீண்டும் தோல்வியடைந்துள்ளார்.
புதுடெல்லி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC Final) இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியுற்ற பிறகு, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் தலைமைத்துவம் குறித்து பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்குமாறு ட்விட்டரில் மக்கள் கோருகின்றனர். விராட் கோலி தானாகவே கேப்டன் பதவியிலிருந்து விலகி விட வேண்டும் என்றும் பலர் கருதுகிறார்கள். தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது, இந்த கோரிக்கைகளுக்கு தகுந்த காரணங்களும் இருப்பதாகவே தோன்றுகிறது.
கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை
சர்வதேச கிரிக்கெட்டில், தற்போது உள்ள வீரரகளில் விராட் கோலி (Virat Kohli) மிகச் சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு கேப்டனாக அவர் மீண்டும் தோல்வியடைந்துள்ளார். இதுவரை, விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி ஒரு ஐசிசி போட்டி கோப்பையைக்கூட வெல்லவில்லை.
கோலிக்கு பதிலாக, இந்த வீரர் டெஸ்ட் கேப்டன் பதவியை பெறக்கூடும்
டெஸ்ட் கிரிக்கெட்டைப் பற்றி பேசுகையில், விராட் கோலியை விட அஜிங்க்யா ரஹானே இந்திய அணிக்கு ஒரு சிறந்த கேப்டனாக இருப்பார் என பல விளையாட்டு நிபுணர்கள் கருதுகிறார்கள். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில், அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி வெறும் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. விராட் கோலி, முகமது ஷமி போன்ற மூத்த வீரர்கள் இல்லாமல் டீம் இந்தியாவால் இந்த மோசமான நிலையிலிருந்து மீள முடியாது என மார்க் வா மற்றும் ரிக்கி பாண்டிங் கூறினர்.
ஆஸ்திரேலியாவில் அற்புதம் நடந்தது
ஆனால் அஜிங்க்யா ரஹானே ஆஸ்திரேலியாவின் மைண்ட் கேம்களில் கவனம் செலுத்தவில்லை. ரஹானேவின் தலைமையில் மெல்போர்னில் டீம் இந்தியா மிகப்பெரிய அளவில் மீண்டு வந்தது. நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையில், இந்திய அணி மெல்போர்ன் டெஸ்டில் களம் இறங்கியது. புதிதாக நியமிக்கப்பட்ட கேப்டன் அஜிங்க்யா ரஹானே, இந்திய அணியை முன்னணியில் இருந்து வழி நடத்தினார். மெல்போர்னில் அற்புதமான சதம் அடித்தார். இதன் பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.
ALSO READ: Plant Trees என்று கேட்டுக் கொண்ட தோனியை கலாய்ப்பது ஏன்?
வெளிநாட்டில் விராட் கோலியை விட சிறந்த சாதனை
விராட் கோலியை விட பேட்ஸ்மேனாக அஜிங்க்யா ரஹானே (Ajinkya Rahane) வெளிநாடுகளில் சிறந்த சாதனைகளை படைத்துள்ளார். அஜிங்க்யா ரஹானே பேட்டிங்கோடு தலைமைத்துவ திறமையும் கொண்டவர். கடந்த சில ஆண்டுகளில், அஜின்கியா ரஹானே டெஸ்ட் கிரிக்கெட்டில் பல அற்புதமான இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளார். இது பலமுறை இந்திய அணியின் கவுரவத்தை காப்பாற்றியுள்ளது. ரஹானே தனது பெரும்பாலான சிறந்த இன்னிங்ஸ்களை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் விளையாடியுள்ளார்.
கேப்டன் பதவியிலும் விராட் கோலியை விட சிறப்பான செயல்பாடு
விராட் கோலியின் தலைமையில், இந்திய அணி 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 36 வெற்றிகள், 15 தோல்விகள் மற்றும் 10 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. அஜிங்க்யா ரஹானே 5 டெஸ்ட் போட்டிகளில் டீம் இந்தியாவுக்குத் தலைமை தாங்கியுள்ளார். அதில் இந்தியா 4 போட்டிகளில் வென்றது. 1 போட்டி டிராவில் முடிந்தது. சிறப்பு என்னவென்றால், ரஹானேவின் தலைமையில் இந்தியா ஒரு முறை கூட தோல்வியை சந்தித்ததில்லை.
கோலி விலக வேண்டும் என கோரிக்கை
விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கலாம், ஆனால் ஒவ்வொரு முறையும் அவரது கேப்டன் பதவி குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. விராட் கோலி கேப்டனாக ஆன புதிதில் மகேந்திர சிங் தோனி விளையாடிக்கொண்டிருந்தார். பல சமயங்களில் அவர் பல முக்கிய முடிவுகளை எடுப்பதிலும், ஃபீல்டிங் செட் செய்வதிலும் கோலிக்கு உதவியதை காண முடிந்தது.
ஆகையால் தோனியின் உதவியால் தான் விராட் கேப்டனாக நல்ல முறையில் செயல்பட முடிந்தது என பலர் கருதுகிறார்கள். அது தவிர, அனில் கும்ப்ளே சர்ச்சை, சாம்பியன்ஸ் டிராபியில் ஏற்பட்ட தகராறுகள், முக்கிய ஐ.சி.சி போட்டிகளில் தோல்விகள் மற்றும் அதிகப்படியான ஆக்ரோஷ்ஹம் ஆகிய விஷயங்களால் பெரும்பாலும் விராட் கோலி கிரிக்கெட் ரசிகர்களின் இலக்காக இருக்கிறார்.
மறுபுறம், கிரிக்கெட் ரசிகர்கள் அஜின்கியா ரஹானேவில் ராகுல் திராவிட்டின் (Rahul Dravid) ஒரு அம்சத்தை பார்க்கிறார்கள். அவர் அமைதியாக தன் வேலையை செய்துவிட்டு, பெருமையை அணிக்கு அளிக்கும் தன்மை கொண்டவர். இந்த ஒப்பிடுதல் ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு இடையில் நடக்கு ஒப்பீடுக்கு இணையாக உள்ளது.
ALSO READ:WTC Final தோல்வியின் தாக்கம்: இந்த வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்படலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR