ODI Cricketer of decade:விராட் கோலிக்கு மிகப் பெரிய விருது, சச்சின், கபில் தேவுக்கும் கௌரவம்
2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்த கோலி, அந்த 10 ஆண்டுகளில் 60 மேலான சராசரியுடன் 11,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதில் 42 சதங்களும் அடங்கும்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 2010-களின் விஸ்டன் அல்மானாக் ஒருநாள் போட்டிகளின் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ‘ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக’ அறிவிக்கப்பட்டார். ஆகஸ்ட் 2008 இல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான 32 வயதான கோலி, இதுவரை இந்த விளையாட்டில் ஈடுபட்டுள்ள வீரர்களில், மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவர் 254 ஒருநாள் போட்டிகளில் 12,169 ரன்களை அடித்துள்ளார்.
“முதல் ஒருநாள் சர்வதேச போட்டி விளையாடப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிகழ்வை நிவைவுகூரும் வகையில், 2021 விஸ்டன் கிரிக்கெட் வீரர்களின் பதிப்பில், ஐந்து ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்,” என்று கிரிக்கெட்டின் பைபிள் என விவரிக்கப்படும் குறிப்பு புத்தகம் குறிப்பிட்டுள்ளது.
"1971 முதல் 2021 வரையிலான ஒவ்வொரு பத்து ஆண்டுக்கும் ஒரு கிரிக்கெட் வீரர் பெயரிடப்பட்டுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli) 2010 களுக்கான விருதைப் பெற்றார்" என்று விஸ்டன் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்த கோலி, அந்த 10 ஆண்டுகளில் 60 மேலான சராசரியுடன் 11,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதில் 42 சதங்களும் அடங்கும். கோலி தவிர, 1990-களின் ஒருநாள் சர்வதேச போட்டிகளின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) பெயரிடப்பட்டுள்ளார். அவர் 1998 ஆம் ஆண்டில் மட்டும் 9 சதங்களை அடித்துள்ளார். ஒரே ஆண்டில் வேறு எந்த வீரரும் இத்தனை சதங்களை அடிக்கவில்லை.
ALSO READ: IPL 2021: 6 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாதை வென்றது பெங்களூரு அணி
உலகக் கோப்பை வென்ற இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் (Kapil Dev) 1980 களின் ஒருநாள் கிரிக்கெட் வீரராக பெயரிடப்பட்டுள்ளார். கபில் தேவின் தலைமையில் இந்திய அணி முதன் முதலாக 1983 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. கபில் தேவ் அந்த பத்து ஆண்டுகளில் மற்ற அனைவரையும் விட அதிக விக்கெட்டுகளை எடுத்ததோடு, மிக அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் அதிக ரன்களையும் எடுத்துள்ளார்.
இதற்கிடையில், ஸ்டோக்ஸ் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக ‘உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக’ அறிவிக்கப்பட்டார். "இந்த ஆண்டில் அவர் அனைவரையும் விட மிக அதிகமாக 641 டெஸ்ட் ரன்களை எடுத்துள்ளார். பந்துவீச்சிலும் அவர் அசத்தியுள்ளார். அவரது தந்தையின் மறைவு என்ற பெரிய சோகம் இந்த ஆண்டு அவரை தாக்கியபோதும் அவர் இந்த சாதனைகளை செய்துள்ளார்” என்று விஸ்டன் ஆசிரியர் லாரன்ஸ் பூத் கூறினார்.
விஸ்டன் அல்மானாக்கின் 2021 பதிப்பில் டோம் சிபிலி, ஜாக் கிராலி, வெஸ்ட் இந்தியன் ஜேசன் ஹோல்டர், முகமது ரிஸ்வான் மற்றும் டேரன் ஸ்டீவன்ஸ் ஆகியோர் இந்த ஆண்டின் விஸ்டன் கிரிக்கெட் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும், ஆஸ்திரேலியாவின் பெத் மூனிக்கு ‘உலகின் முன்னணி பெண் கிரிக்கெட் வீரர்’ விருது வழங்கப்பட்டது. மேற்கு இந்திய ஆல்ரவுண்டர் கீரோன் பொல்லார்ட் உலகின் முன்னணி டி 20 கிரிக்கெட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR