SRH vs RCB IPL 2021:சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இடையிலான போட்டி இந்த ஐபிஎல் சீசனின் ஆறாவது போட்டியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 6 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை பெங்களூரு அணி வென்றது. முதலில் மட்டை வீச களம் இறங்கிய பெங்களூரு அணி 149 ரன்களுக்கு இன்னிங்சை முடித்தது.
150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Also Read | விதிகள் மாறாவிட்டால் 3 லட்சம் Remdesivir தடுப்பூசிகள் அழிக்கப்படும்
போட்டியின் முடிவு ஏமாற்றம் கொடுத்திருப்பதாக ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை கட்டுப்படுத்த தங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்று வார்னர் கூறுகிறார்.
தங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிடும் அவர், மிடில் ஆர்டர் சிறப்பாக விளையாடியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று அவர் சொல்கிறார். ஆனால், அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவோம் என்று உறுதியாகக் கூறுகிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அருமையான பந்துவீச்சைக் கொண்டு ஹைதராபாத் அணியை கட்டுப்படுத்தியது. கோஹ்லியின் தரப்பு ஒரு சரியான தொடக்கத்தைக் கொடுத்தது. பந்து வீச்சாளர்களின் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்களை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தினார்கள்.
Also Read | ரம்ஜான் நோன்பில் நாள் முழுதும் உற்சாகமாக இருக்க Food Tips
150 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய ஹைதராபாத் அணியின் சாஹா ஆரம்பத்திலேயே வெளியேறினார். வார்னர் மற்றும் மனிஷ் பாண்டே ஜோடி 83 ரன்களைச் சேர்த்தது, கேப்டன் வார்னர் அற்புதமான 54 ரன்கள் எடுத்தார்.
அவர் அவுட்டான பிறகு ஹைதராபாத் அணியின் வீரர்கள் தொடர்ந்து அவுட்டானார்கள். 2016ஆம் ஆண்டு ஐ.பி.எல் சாம்பியன்களால் இறுதி 4 ஓவர்களில் 35 ரன்கள் எடுக்க முடியவில்லை என்பது அவர்களுடைய தோல்விக்கு காரணமானது.
சென்னை சேப்பாக்கம் மைதானம், நேற்று மும்பை அணிக்கு ஆறுதல் கொடுத்தால், இன்று பெங்களூருவுக்கு பொங்கும் பெருமையை கொடுத்திருக்கிறது.
தமிழ் புத்தாண்டில் தமிழக தலைநகரில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தக்க வைத்து இந்த ஆண்டு, பெங்களூர் கோப்பையை பெறுமா? பெங்களூரு அணி சரியான தொடக்கத்தை கொடுத்திருக்கிறது என்றே ரசிகர்கள் கூறுகின்றனர்.
ALSO READ | கொரோனா 2வது அலை: அச்சுறுத்தும் தொற்று, அலட்சியம் காட்டினால் அவதியே மிஞ்சும்
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR