இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளராக இருந்த இஷாந்த் சர்மா, விராட் கோலியின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவர். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக இருந்தவர். அண்மைக்காலமாக அவரது பந்துவீச்சில் தொய்வு ஏற்பட்டதால் அனைத்து வடிவிலான இந்திய அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். மறுபுறம் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு பட்டாளம் இருப்பதால், அவருக்கான இடம்  கேள்விக்குறியானதற்கு மற்றொரு காரணம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஜடேஜாவை புகழந்து தோனியை புறக்கணித்த ரெய்னா - காரணம் என்ன?


முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், புவனேஸ்வர் குமார் என வேகப்பந்து வீச்ச பட்டாளம் உள்ளது. இவர்கள் தவிர ஷர்துல் தாக்கூர் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரும் பேக்கப் பவுலர்களாக இருக்கின்றனர். இதனால், இவர்களைக் கடந்து இந்திய அணிக்கு இஷாந்த் சர்மாவை தேர்ந்தெடுக்கும் வகையில் அவருடைய ஃபர்மாமென்ஸ் இல்லை. கடைசியாக நவம்பர் 2021 இல் நியூசிலாந்துக்கு எதிரான கான்பூர் டெஸ்டில் இஷாந்த் சர்மா இந்தியாவுக்காக விளையாடினார். அந்த டெஸ்டில் அவரால் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அதற்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கான டெஸ்ட் போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்படவில்லை. 


மேலும் படிக்க |  ஐபிஎல்-ல் கடைசி ஓவரில் அதிக சிக்ஸ்சர்கள் அடித்தது இவரா?


100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இஷாந்த் சர்மா,  311 விக்கெட்டுகளையும், 80 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, அதில் 115 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2016 ல் இருந்து அவருக்கு ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்புக் கிடைக்காத அவர், ஐபிஎல் போட்டிகளிலும் ஓரங்கட்டப்பட்டுள்ளார். இதனால், விரைவில் அவருடைய ஓய்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு என எதிர்பார்க்கப்படுகிறது.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR