இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் பேட்டிங் செய்த போது, பந்து ஸ்டம்பைத் தாக்கிய பிறகும், பெயில்கள் அப்படியே இருந்ததால் அதிஷ்டவசமாக தப்பினார்.  அதிரடி ஆட்டக்காரரான பந்த் இரண்டு இன்னிங்சிலில் சிறப்பாக விளையாடி அணிக்காக ரன்களை சேர்த்தார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ஐபிஎல் 2022: சென்னை vs கொல்கத்தா! யார் பலம்?


இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸின் 42 வது ஓவரின் 5 வது பந்தில் ரிஷப் பண்ட் ஸ்ட்ரைகில் இருந்தார்.  பிரவீன் ஜெயவிக்ரமா பந்து வெளியில் குத்தி நேராக ரிஷப்பின் காலில் பட்டது, பின்பு ஸ்டெம்பிலும்பட்டது.  ஆனால் பெயில்ஸ் கீழே விலாததால் அவுட் ஆகாமல் தப்பினர் பந்த்.  மேலும், அவர் 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதம் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். 1982ல் கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக 30 பந்துகளில் அரைசதம் அடித்த புகழ்பெற்ற ஆல்-ரவுண்டர் கபில்தேவின் 40 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். 


 



மேலும், இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த 2வது அதிவேக அரைசதம் இதுவாகும், ஷாகித் அப்ரிடிக்கு அடுத்தபடியாக பந்த் உள்ளார். 26 பந்துகளில் அரைசதம் அடித்தவர். மேலும், இயான் போத்தம் 28 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.


டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிவேகமாக பதிவுசெய்யப்பட்ட அரைசதங்கள்:


28 ரிஷப் பந்த் vs SL பெங்களூரு 2022 


30 கபில் தேவ் vs பாக் கராச்சி 1982


31 ஷர்துல் தாக்கூர் vs எங் ஓவல் 2021


32 சேவாக் vs இங்கிலாந்து சென்னை 2008


மேலும் படிக்க | சர்ச்சை முறையில் ரன் அவுட்! கடுப்பான மயங்க் அகர்வால்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR