இந்தியா இங்கிலாந்து அணிகள் தர்மசாலாவில் விளையாடும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அபாரமாக பந்துவீசி குல்தீப் ஹீரோவாகியுள்ளார். அவரது பந்துவீச்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதில் ஒரு விக்கெட், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் பக்காவாக போட்ட ஸ்கெட்சில் குல்தீபுக்கு விழுந்தது. இங்கிலாந்து அணி டாஸ் வெற்றி பெற்றதும் அந்த அணியின் கேப்டன் பென்ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் விளையாடுவதாக அறிவித்தார். அதன்படி ஜாக் கிராலி, பென் டக்கெட் ஆகியோர் ஓப்பனிங் இறங்கினர். முதல் சில ஓவர்களில் இருவரும் தடுமாறினாலும், பின்னர் சுதாரித்துக் கொண்டு சிறப்பாக விளையாடினர். இவர்களின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஐபிஎல் 2024: கிரிக்கெட்டில் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வு - அறிவிப்பு விரைவில்


அப்போது வரை ஒரு விக்கெட் விழாமல் இருந்த நிலையில் வேகப்பந்துவீச்சை நிறுத்திவிட்டு சுழற்பந்துவீச்சை கொண்டு வந்தார் கேப்டன் ரோகித் சர்மா. அவரின் இந்த முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. குல்தீப் யாதவ் பந்துவீச தொடங்கியதும் 27 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த பென் டக்கெட் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரின் கேட்சை சுப்மன் கில் சூப்பராக ஓடிச் சென்று பிடித்தார். அடுத்தாக வந்த ஓலி போப், ஜாக் கிராலியுடன் சேர்ந்து நிதானமாக ஆடிக் கொண்டிருந்தார். 



ஓலி போப்பின் ஒவ்வொரு ஸ்டெப்பையும் கவனத்துக் கொண்டே இருந்த விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல், இது குறித்து குல்தீப்பிடம் இந்தியில் சொல்லிக் கொண்டே இருந்தார். அப்போது ஒரு ஓவரில் குல்தீப் பந்துவீச வருவதற்கு முன்பு, ஓலி போப் இறங்கி ஆடப்போகிறார், அதற்கு ஏற்றார்போல் பந்துவீசு என இந்தியில் துருவ் ஜூரல் சொல்கிறார். அவர் அப்படி கூறிய அடுத்த பந்தே குல்தீப் ஸ்மார்டாக பந்து வீசினார். ஸ்டிரைக்கில் இருந்த ஓலி போப் அவர்கள் கணித்தது போலவே இறங்கி ஆட முயற்சிக்க, விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் ஸ்டம்பிங் செய்து ஆட்டமிழக்க செய்தார். தோனி போல் அவர் போட்ட ஸ்கெட்சில் பரிதாபமாக விக்கெட்டை பறிகொடுத்தார் ஓலி போப்.



இந்த விக்கெட்டுக்குப் பிறகுதான் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க தொடங்கினர். பென் ஸ்டோக்ஸ் விக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் யாதவுக்கு 50வது விக்கெட்டாக அமைந்தது. இப்போட்டியில் மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இன்னொருபுறம் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்த, ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினார். மொத்தம் 10 விக்கெட்டுகளையும் சுழற்பந்துவீச்சாளர்களே கைப்பற்றி அசத்தினர். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் சிராஜூக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை.


5 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப், இந்திய அணிக்காக மிக குறைந்த பந்துகளில் 50 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 1871 பந்துகளை வீசி 50 விக்கெட்டுகளை குல்தீப் எடுத்திருக்கிறார். 2205 பந்துகளில் 50 விக்கெட்டுகள் எடுத்து இரண்டாவது இடத்தில் அக்சர் படேலும், 2520 பந்துகளில் 50 விக்கெட் எடுத்து பும்ரா 3வது இடத்திலும் இருக்கின்றனர். 


மேலும் படிக்க | பேட்டில் பட்டும் அவுட் கொடுக்காத மூன்றாவது நடுவர் - இலங்கை, வங்கதேசம் டி20 போட்டியில் களேபரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ