ரோஹித்தின் செயலால் கடுப்பான ரிஷப் பந்த்!
IND vs SA 2022: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது.
ரிஷப் பந்த் மைதானத்தில் மிகவும் கலகலப்பான வீரர்களில் ஒருவர் மற்றும் அவர் செய்யும் செயல்கள் எப்போதும் சுவாரஸ்யமான சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது. நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் வீசிய பந்து ரோசோவ் காலில் பட்டு சென்றது. இதனை பந்த் பேட்டில் பட்டது என்று ரோஹித் ஷர்மாவிடம் கூறினார். ரோஹித் மற்றும் உமேஷ் இருவருமே காலில் பட்டது என்று கூறிய போதிலும், அவர் ‘பேட் லகா தா’ என்று கத்தியபோது அனைவரையும் சிரிப்பலையில் கொண்டு சென்றது.
மேலும் படிக்க | ஐயோ...! மயிரிழையில் உயிர் பிழைத்த முன்னாள் இந்திய வீரர் - போட்டியின்போது காயம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா அணி தோல்வி அடைந்தது. பவுலர்களின் மோசமான பந்து வீச்சினால் இந்திய அணி தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமாவை ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ஸ்கோருக்கு வெளியேற்றினாலும், குயின்டன் டி காக் மற்றும் ரிலீ ரோசோவ் இடையேயான பாட்னர்ஷிப் அணிக்கு வலுவான ரன்களை சேர்த்து. ரோஸ்ஸௌவ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். அவர் 0 ரன்னில் இருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றது.
பந்த் கேப்டன் ரோஹித் சர்மாவை ரிவியூ எடுக்க சொல்லி வற்புறுத்தினார். இருப்பினும், பந்து காலில் தான் பட்டது என்று ரோஹித் உறுதியாக இருந்ததால் ரிவியூ எடுக்காமல் இருந்தார். உமேஷ் யாதவ்வும் தனது காலைச் சுட்டி உறுதிப்படுத்தினார். இதனால் பந்த் ஏமாற்றமடைந்தார், ரீபிளேயில் ரோஹித் மற்றும் உமேஷ் சரியா முடிவை தான் எடுத்தனர் என்பது நிரூபணமானது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
மேலும் படிக்க |இந்திய அணி அறிவிப்பு : ஷிகர் தவான் கேப்டன்... முகேஷ் குமார் அறிமுகம் - யார் இவர்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ