ரிஷப் பண்ட் செய்த நாசுக்கான வேலை! உலக கோப்பையை வெல்ல இதுதான் காரணம்?
India vs South Africa: டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றுள்ள நிலையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் செய்த ஒரு சாமர்த்தியமான செயல் தற்போது வெளியில் வந்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்து 176 ரன்கள் அடித்த போதிலும், தென்னாப்பிரிக்க அணி கிட்டத்தட்ட வெற்றி பெரும் நிலையில் இருந்தது. இருப்பினும் கடைசி கட்டத்தில் பேட்டிங்கில் சொதப்பியதால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 42 பந்துகளில் 68 ரன்கள் தேவை என்ற நிலையில், ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அக்சர் மற்றும் குல்தீப் யாதவ் ஓவர்களை அடித்து நொருக்கிறார். மறுபுறம் டேவிட் மில்லர் அவருக்கு கைகொடுத்தார். அக்சர் படேலின் கடைசி ஓவரில் கிளாசென் 24 ரன்கள் அடித்து கோப்பையை தென்னாபிரிக்கா பக்கம் கொண்டு சென்றார்.
மேலும் படிக்க | ரோகித், விராட் கோலிக்கு சச்சின் கொடுத்திருக்கும் ஸ்பெஷல் மெசேஜ்..!
மறுபுறம் மில்லர் குல்தீப் யாதவ் ஓவரில் பவுண்டரி அடிக்க தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற 30 பந்துகளில் 30 ரன் தேவைப்பட்டது. இந்த கட்டத்தில் பல இந்திய ரசிகர்கள் கோப்பையை இழந்துவிட்டோம் என்று நினைந்தனர். ஆனாலும் கடைசி 5 ஓவர்களை இந்திய அணி சிறப்பாக பந்து வீசியது. 16வது ஓவரை பும்ரா துல்லியமாக வீச ஒரு பவுண்டரி கூட போகவில்லை. இதனால் தென்னாபிரிக்கா பக்கம் பிரஷர் அதிகமானது. இந்த சமயத்தில் ஹர்திக் பாண்டியா 17வது ஓவரை வீச வந்தார். அந்த சமயத்தில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற 24 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டது. கிளாசன் 17வது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்டார்.
அப்போது பேட்ஸ்மேனின் கவனத்தை சிதறடிக்க விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பிசியோவை அழைத்து முழங்காலில் சில டேப்களை சுற்றினார். இதனால் போட்டி சில நிமிடங்கள் தாமதம் ஆனது. இதுவே இந்திய அணியின் வெற்றிக்கும் வழிவகுத்தது. அதிரடியாக விளையாடி வந்த கிளாசன் தனது கவனத்தை இழந்து ஹர்திக்கின் முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். இந்த விக்கெட் இந்தியாவின் உலக கோப்பை கனவை மீண்டும் நனவாக்கியது. இதனை பலரும் கவனிக்காத நிலையில், முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வர்ணனையில் குறிப்பிட்டு இருந்தார். "இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறது, போட்டியை மெதுவாக்குகிறது, இதனால் இந்த இரண்டு பேட்ஸ்மேன்களின் கவனமும் சிதறும்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
ரவி சாஸ்திரி சொன்னது போலவே கிளாசன் ஆட்டமிழந்த பின்பு தென்னாபிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. அடுத்த ஓவரில் பும்ரா மார்கோ ஜான்சனை ஆட்டமிழக்கச் செய்தார். 19வது ஓவரை அர்ஸ்தீப் சிங் சிறப்பாக வீச இறுதி ஓவரில் வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்திக் இறுதி ஓவரை வீசினார். முதல் பந்திலேயே சிக்ஸ் அடிக்க முயன்ற மில்லரை பவுண்டரி லைனில் இருந்த சூர்யகுமார் சிறப்பான கேட்சின் மூலம் அவுட் செய்து வெளியேற்றினார். இறுதியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பையை வென்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ