இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஸ்டஃபானி டெய்லர் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் இருந்து காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியின் கேப்டன் ஸ்டஃபானி டெய்லர் விலகியுள்ளார்!
இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் இருந்து காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியின் கேப்டன் ஸ்டஃபானி டெய்லர் விலகியுள்ளார்!
முன்னாதக ஆன்டிகுவாவில் நடைப்பெற்ற இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தின் விளைவால் நடப்பு தொடரில் இருந்து ஸ்டஃபானி விலகியுள்ளார். குழு பிசியோதெரபிஸ்ட் மேத்யூ பார்ச்மென்ட், CWI-யின் தலைமை மருத்துவ அதிகாரியுடன் கலந்தாலோசித்த பின்னர், ஸ்டாஃபனி ஒரு ‘தரம் I’ இடைநிலை இணை தசைநார் சுளுக்குத் தக்கவைக்குமாறு அறிவுறத்தப்பட்டுள்ளார். இதற்கு இரண்டு வாரங்கள் ஓய்வு தேவைப்படுவதால் தற்போதை தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார் என CWI வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலயையில் அணியில் ஸ்டாஃபானிக்கு பதிலாக செர்ரி-ஆன் ஃப்ரேசர் சேர்க்கப்பட்டுள்ளார், மேலும் வரும் போட்டிகளில் அனிசா முகமது கேப்டனாக முன்நிற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி தேர்வாளர் ஆன் பிரவுன்-ஜான் இதுகுறித்து கூறுகையில், "இந்த முக்கியமான நேரத்தில் ஸ்டாஃபானியை இழப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது, மேலும் அவரது வெற்றிடம் அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவரது உடல்நலம் மற்றும் மீட்பு மிக முக்கியமானது. சில மாதங்களில் ICC டி20 உலகக் கோப்பை போட்டிகள் வரவுள்ளது. இந்நிலையில் ஸ்டாஃபானி குணமடைந்து முழு உடற்தகுதிக்கு திரும்புவதற்கான நேரம் கிடைப்பது மிகவும் முக்கியமானது.
கயனீஸை சேர்ந்த செர்ரி-ஆன் ஃப்ரேசர் ஒரு இளம் ஆல்-ரவுண்டர் ஆவார், அவர் கடைசியாக முகாமில் இருந்தபோது அவரது ஆட்ட திறமையால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். எனவே, இப்போது அவர் அணியில் இணைந்திருப்பது அவரது வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்கான அனுபவத்தைப் அளிக்கும் என நம்பப்படுகிறது.