IND vs AFG LIVE Streaming: இன்று (புதன்கிழமை) டி-20 உலகக் கோப்பையில் ஒரு முக்கியமான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ள இந்திய அணியை மீண்டும் வெற்றி பாதைக்கு கொண்டு வரவேண்டிய கட்டாயத்தில் ​​விராட் கோஹ்லி உள்ளார். உலகக் கோப்பை த்ப்டரில்`தொடரில் தத்தளித்து வரும் தனது அணியை மீண்டும் பழைய பாதையில் கொண்டு வரக்கூடிய வியூகத்தை இன்று விராட் கோலி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான இரண்டு மோசமான தோல்விகளுக்குப் பிறகு இந்தியாவின் ரன் தடம் புரண்டுள்ளது. மேலும் இந்திய அணி காட்டிய செயல்திறன் அரையிறுதிக்கு தகுதி பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி அதிக ரன்-ரேட் விகிதம் பெறும்பட்சத்தில், செமிபைனலில் நுழையலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்கானிஸ்தான் ஸ்காட்லாந்து மற்றும் நமீபியாவிற்கு எதிரான இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது  இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றியை பதிவு செய்துள்ளது.


கோஹ்லியைப் பொறுத்தவரை, இந்தியாவின் டி20 கேப்டனாக அவரது கடைசி தொடர் இதுவாகும். அடுத்து மூன்று போட்டிகளில், அணித் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கலாம், மேலும் திறமையான வீரர் அஷ்வினை மீண்டும் அணியில் சேர்ப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 


ALSO READ |  IND vs AFG மேட்ச் நடக்கும் அபுதாபி பிட்ச் யாருக்கு சாதகம்? Toss ரொம்ப முக்கியம்!


இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டி எப்போது நடைபெறும்?


இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி நவம்பர் 3, 2021 புதன்கிழமை நடைபெறவுள்ளது.


இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டி நடைபெறும் இடம் எது?


இந்தப் போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது.


இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டி எத்தனை மணிக்கு தொடங்கும்?


இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும். இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு டாஸ் போடப்படும்.


இந்தியா vs ஆப்கானிஸ்தான் போட்டியை எந்த டிவி சேனல்கள் ஒளிபரப்பும்?


ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் போட்டி ஒளிபரப்பப்படும். போட்டியின் நேரடி ஒளிபரப்பு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரிலும் பார்க்கலாம்.


ALSO READ |  IND vs AFG: அணியில் மாற்றம் வருமா? இந்த 11 வீரர்கள் இன்று களம் இறங்கலாம்!


அணி விவரங்கள்:
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (விசி), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் (வி.கே), ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ராகுல் சாஹர். வருண் சக்ரவர்த்தி, ரவிச்சந்திரன் அஸ்வின்


ஆப்கானிஸ்தான்: முகமது நபி (கேப்டன்), ஹஸ்ரத்துல்லா ஜசாய், அகமது ஷாஜாத், குல்பாடின் நைப், நவீன் உல் ஹக், ரஷீத் கம், ஹமீத் ஹசன், ரஹம்னாஉல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஜத்ரான், கரீம் ஜனத், முஜீப் உர் ரஹ்மான், ஹஷ்மத்துல்லா, உஸ்மத் அஹதி, உஸ்மத் அஹ்மத் அஹிஹான்.


ALSO READ |  இஷான் கிஷன் ஓப்பனிங் பேஸ்மேனாக களமிறங்கியதற்கான காரணம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR