உலக டென்னிஸ் வீரர்கள் பட்டியலிலும், ரசிகர்களை ஈர்த்த வீராங்கனை என்ற அடிப்படையிலும் முதல் இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் வீராங்கனையான ஆஷ்லே பார்டி. 25 வயதேயான இவர், டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவருடைய இந்த திடீர் அறிவிப்பு உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு டென்னிஸ் போட்டிக்குள் முதல்முறையாக காலடி எடுத்து வைத்த ஆஷ்லே பார்டி, கடந்து வந்த 12 ஆண்டுகளில் மொத்தம் 15 சர்வதேச பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | CSK Captain: தல தோனியின் இடத்தை நிரப்ப இவர்களே சரியானவர்கள்! சுரேஷ் ரெய்னாவின் தேர்வு...


மேலும், இதுவரை மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ள அவர், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றார். அதேபோல, கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் போட்டி மற்றும் அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய  ஓபன் டென்னிஸ் போட்டி அகியவற்றிலும் இவர் பட்டம் வென்றுள்ளார். தொடர்ந்து 121 நாட்கள் உலகின் முதல் நிலை வீராங்கனையாக இருந்தவர் என்ற பெருமைக்குரிய ஆஷ்லே, தனது 25 வயதில் உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார்.



டென்னிஸ் வீரர், வீராங்கனைகளுக்கும் வரும் தலைமுறைக்கும் எடுத்துக்காட்டாகவும் உத்வேகமாகவும் உள்ள  ஆஷ்லே பார்டி தற்போது, டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிர்க்கு பேட்டியளித்துள்ள  ஆஷ்லே பார்டி, டென்னிஸ் எனது தனிப்பட்ட வாழ்கையில் இருந்து பிரிக்க முடியாத ஒன்று எனவும் அதன் மீதான அன்பு ஒருபோதும் குறையாது எனவும் கனத்த இதயத்துடன் கூறியுள்ளார். அது  மட்டும் இன்றி, இந்த ஓய்வை அறிவிக்கும்போது மிகவும் கடினமாக இருந்தது என உணர்வுப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.  


மேலும் படிக்க | 13 வயது மாற்றுத் திறனாளி சிறுமியின் சாதனை! பாக் ஜலசந்தியை கடந்து சாதித்த ஜியா ராய்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR