ஐபிஎல் 2023 ஏலம்: இந்தியன் பிரீமியர் லீக் சீசன் 16க்கான ஏலம் இன்று மதியம் தொடக்கி நடந்து வருகிறது. இந்த முறை ஏலத்தில் அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்பட்டன. பஞ்சாப் கிங்ஸ் அணி சாம் கர்ரானை அதிக விலைக்கு வாங்கியுள்ளது. ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியலை பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாம் கரன் (ரூ. 18 கோடியே 50 லட்சம் - பஞ்சாப் கிங்ஸ்)


இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டரான பந்துவீச்சாளர் சாம் கரன், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையிலும் அற்புதமாக செயல்பட்டார். பந்துவீச்சுடன் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுகிறார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தபோது, ​​சாம் கரன் தனி ஒருவராக நன்றாக ஆடினாலும், ஒட்டுமொத்த அணியின் செயல்பாடு மோசமாக இருந்தது. கடந்த ஆண்டு அவர் ஐபிஎல்லில் இருந்து விலக முடிவு செய்தார். சென்னை அணியில் இருந்து விலகினார். ஆனால் இந்த முறை அவரை வாங்க சென்னை விரும்பியது. இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்று சாதனைகளை முறியடித்து ஏலத்தில் சாம் குர்ரனை வாங்கியது. அவரை ரூ. 18 கோடியே 50 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது.



மேலும் படிக்க: IPL Mini Auction 2023: சாம் கரண் காட்டில் பண மழை! ஐபில் வரலாற்றில் புது உச்சம்


நிக்கோலஸ் பூரன் (ரூ. 16 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்)


நிக்கோலஸ் பூரன் கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்தார். அதற்கு முன்பு அவர் பஞ்சாப் கிங்ஸில் இருந்தார். ஆனால் அவரது செயல்திறன் சிறப்பாக இல்லை. அவரது அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைத்தேடி தரும் பேட்ஸ்மேன் என்ற இமேஜ் இருப்பதால், அவரை ஏலம் எடுக்க பல அணிகளுக்கு இடையே போட்டி இருந்தது. ஆனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உரிமையாளர் நிக்கோலஸ் பூரனை ரூ.16 கோடிக்கு வாங்கியது.



மேலும் படிக்க: சாம் கரண் போனால் என்ன பென் ஸ்டோக்ஸை தட்டி தூக்கிய சிஎஸ்கே! தோனியின் மாஸ்டர் பிளான்


பென் ஸ்டோக்ஸ் (ரூ 16 கோடியே 25 லட்சம் - சென்னை சூப்பர் கிங்ஸ்)


இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. பல அணிகள் அவர் மீது ஆர்வம் காட்டின. ஆனால் இறுதியில் சிஎஸ்கே வென்றது. ரூ 16 கோடியே 25 லட்சத்துக்கு வாங்கியது. பென் ஸ்டோக்ஸ் தோனியின் தலைமையின் கீழ் விளையாடுவார். ஒருவேளை ஸ்டோக்ஸை சென்னை அணியின் புதிய கேப்டனாக கூட பார்க்கக்கூடும்.


கேமரூன் கிரீன் (17 கோடி 50 லட்சம் - மும்பை இந்தியன்ஸ்)


ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனுக்காக டெல்லி கேபிடல்ஸ் அணி அதிக ஆர்வம் காட்டியது. அவர்களைத் தொடர்ந்து மற்ற அணிகளுக்கும் கேமரூன் கிரீன் வாங்க போட்டி போட்டனர். மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்து தங்கள் தொகையை அதிகரித்தது. கேமரூன் க்ரீனை வாங்க மும்பை பெரும் முயற்சி எடுத்தது. டெல்லி உட்பட மற்ற அணிகள் பின்வாங்க இறுதியாக கேமரூனை ரூ. 17 கோடி 50 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்தது. 



மேலும் படிக்க: பொல்லார்டு இடத்தை நிரப்ப வந்த கேம்ரூன் கிரீன்! 2 ஆண்டுகளுக்கு முன்பே மும்பை போட்ட செம ஸ்கெட்ச்


ஹாரி புரூக் (13. 25 கோடி - ஹைதராபாத்)


இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கிற்காக சென்னை மற்றும் ஹைதராபாத் இடையே கடும் போட்டி நிலவியது. காவ்யா மாறன் ஹாரி ப்ரூக்கை விடவில்லை. ஆனால் தொகையின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது. இதன் காரணமாக சிஎஸ்கே உட்பட இறுதியில் மற்ற அணி கைவிட வேண்டியிருந்தது. இதன்பின்னர் அவரை ஐதராபாத் அணி 13. 25 கோடி கொடுத்து ஏலம் எடுத்தது.



மேலும் படிக்க: 17.50 கோடிகளை கொட்டி மும்பை இந்தியன்ஸ் தூக்கிய கேம்ரூன் கிரீன்! யார் இவர்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ