இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி.. MS Dhoni-ஐ விட யார் சிறந்தவர் -BCCI திட்டம்
BCCI vs Stephen Fleming vs MS Dhoni: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் எம்.எஸ் தோனி இடையேயான பிணைப்பு வலுவானது. ஃப்ளெமிங்கை சமாதானப்படுத்த தோனியை பிசிசிஐ நம்பியுள்ளது. இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் யார் இருக்க வாய்ப்பு என்பதை குறித்து பார்ப்போம்.
Who is Indian Team New Head Coach: டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைகிறது. அடுத்ததாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ள ஸ்டீபன் ஃப்ளெமிங்கை நியமிக்க இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை பிசிசிஐ நம்பியுள்ளது. பிசிசிஐ மற்றும் ஃப்ளெமிங் இடையேயான ஒப்பந்தத்தை உருவாக்க எம்.எஸ். தோனியின் உதவியை இந்தியன் கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கிறது. ஸ்டீபன் ஃப்ளெமிங்கிடம் எம்.எஸ். தோனி பேச வேண்டும் என பிசிசிஐ விரும்புவதாகக் கூறப்படுகிறது.
ஹிந்துஸ்தான் டைம்ஸின் அறிக்கையின்படி, 303 போட்டிகளில் நியூசிலாந்தை வழிநடத்திய மற்றும் ஐபிஎல்லில் நீண்ட காலம் பயிற்சியாளராக இருக்கும் ஃப்ளெமிங், பிசிசிஐயின் புதிய தலைமைப் பயிற்சியாளர் பட்டியலில் முதல் தேர்வாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் அவரிடம் தொடர்ந்து பேச்சு வாரத்தையும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ஸ்டீபன் ஃப்ளெமிங் தயங்க காரணம் என்ன?
மறுபுறம் இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்யும் நபர், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவங்களுக்கும் தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என பிசிசிஐ விரும்புவதாகக் கூறப்படுகிறது. மேலும் புதிய தலைமைப் பயிற்சியாளர் ஒப்பந்தம் மூன்று ஆண்டுகள் இருக்கும், அதாவது 2027 வரை தொடரும். மேலும் வருடத்தில் குறைந்தது 10 மாதங்கள் அணியுடன் பயணம் செய்ய வேண்டியிருக்கும். இதன் காரணமாக ஸ்டீபன் ஃப்ளெமிங் தயங்குவதாகக் தகவல்.
ஏற்கனவே ஸ்டீபன் ஃப்ளெமிங் வெவ்வேறு டி20 லீக்குகளில் விளையாடும் அணிகளுக்கு தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார். ஆண்டு முழுவதும் அந்த அணிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். அதுவே தனக்கு போதுமானதாக இருக்கிறது என ஸ்டீபன் ஃப்ளெமிங் கருதுகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமல்ல, மேஜர் லீக் கிரிக்கெட்டில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சவுத் ஆப்ரிக்கா (SA20) இல் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகியவற்றின் பயிற்சியாளராக ஃப்ளெமிங் உள்ளார். ஆண்டு முழுவதும் நான்கு-ஐந்து தொடர்களில் பங்கேற்றாலும் தனக்கான கால அவகாசம் கிடைப்பதால், குடும்பத்துடன் இருக்க போதுமான நேரத்தைப் பெறுகிறார். அதேநேரத்தில் இந்தியாவுடன் மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் செய்தால், குடும்பத்துடன் செலவிடும் நேரம் குறையும் என ஸ்டீபன் ஃப்ளெமிங் யோசிப்பதாகத் தகவல்.
மேலும் படிக்க - இதுவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் யார் யார் தெரியுமா?
யார் இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர்?
ஐபிஎல் 2024 தொடரின் ஆரம்பக் கட்டத்தின் போது இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக தேர்வு குறித்து ஸ்டீபன் ஃப்ளெமிங்கிடம் பிசிசிஐ பேசியுள்ளது. அப்போதுக்கூட கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் அணியுடன் பயணம் செய்ய வேண்டியது குறித்த தனது பிரச்சினையை பிளெமிங் தெளிவுபடுத்தியாதக் கூறப்படுகிறது. அதன்பிறகு பிசிசிஐ வாரியம் ஜஸ்டின் லாங்கர், மஹேலா ஜெயவர்த்தனே மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோரை அணுகியது. ஆனால் இன்னும் ஃப்ளெமிங்கை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.
புதிய தலைமைப் பயிற்சியாளர் பதவியை 'வேண்டாம்' என பிளெமிங் சொல்லவில்லை
அதேநேரம் இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் பதவியை 'வேண்டாம்' என்று பிளெமிங் கூறவில்லை. ஒப்பந்தத்தின் காலம் குறித்து மட்டும் அவர் தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார். இது ஒன்றும் அசாதாரணமானது அல்ல. ராகுல் டிராவிட் கூட ஆரம்பத்தில் ஆர்வம் காட்டவில்லை. அவரிடம் தொடர்ந்து பேசப்பட்டது. அதே போல் தற்போது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என ஸ்டீபன் ஃப்ளெமிங்கை சுற்றி நடக்கும் விசியங்களை குறித்து பிசிசிஐ வட்டாரம் இந்துஸ்தான் டைம்ஸிடம் தெரிவித்தது.
ஃப்ளெமிங்கை சமாதானப்படுத்த எம்.எஸ். தோனி -பிசிசிஐ நம்பிக்கை
ஐபிஎல் 2008 சீசனை தவிர, ஐபிஎல் 2009 சீசன் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃப்ளெமிங் இருந்து வருகிறார். அதேபோல சென்னை அணியின் கேப்டனாக எம்.எஸ் தோனி இருந்து வருகிறார். இந்த மூத்த ஜோடிக்கு இடையேயான பிணைப்பு வலுவானது. எனவே பிசிசிஐ இப்போது ஃப்ளெமிங்கை சமாதானப்படுத்த முன்னாள் இந்திய கேப்டன் தோனியை நம்பியுள்ளது. ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியில் தோனி இருந்த காலத்திலும், ஃப்ளெமிங் அந்த அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ