புதுடெல்லி: உலக டெஸ்ட் சேம்பியன் இறுதிப் போட்டியில் தோற்ற பிறகு இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார் என்று கேள்விகள் எழுந்துள்ளன. இது பற்றி பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் என்ன கூறுகிறார் தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்திய கேப்டன் விராட் கோலியின் தலைமை தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன. ஐ.சி.சி கோப்பையை கைப்பற்றுவதற்கு இந்திய அணியை வழிநடத்தும் திறன் கோஹ்லியிடம் இல்லை என்று சிலர் கருதுகின்றனர்.


அதற்கு பதிலாக, ரோஹித் சர்மா ஒரு சிறந்த கேப்டன் என்று கூறுகின்றனர். இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சல்மான் பட். ரோஹித் ஒரு சிறந்த கேப்டன் மற்றும் இயற்கையான தலைவர் என்று பட் கருதுகிறார்.


Also Read | T20 World Cup: T20 உலகக் கோப்பை UAEஇல் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்குமா?


"தனிப்பட்ட முறையில், ரோஹித் சர்மா விராட் கோலியை விட சிறந்த கேப்டன் என்று நான் நினைக்கிறேன். ஆசியக் கோப்பையின் போது (2018) அவர் கேப்டனாக செயல்படுவதை கூர்ந்து கவனித்தேன். ஸ்டாண்ட்-இன் கேப்டனாக அவர் செயல்பட்ட விதம் அருமையாக இருந்தது. அவர் மிகவும் இயல்பாகவே இருந்தார்.


விராட் கோலியின் தலைமையைப் பற்றி பேசினால், அவர் கேப்டனாக இருக்கும் ஐந்து ஆண்டுகளாக இந்திய அணி முதலிடத்தில் இருந்தது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக எல்லாவற்றிலும் மிகப்பெரிய போட்டியில் வெல்ல முடியவில்லை, எனவே அவரது தலைமையைப் பற்றி கேள்விகளை எழுப்புவது தவறில்லை” என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் தனது யூடியூப் சேனலில் (Youtube channel) கருத்து தெரிவித்துள்ளார்.


2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியை நினைவுகூர்ந்த பட், பும்ராவின் நோ-பால் (no-ball) பற்றி தெரிவித்தார். அந்த பந்து தான் Fakhar Zamanஐ அவுட்டாக்காமல் காபாற்றியது. போட்டியின் வெற்றித் தோல்வியில் சில நேரங்களில் அதிர்ஷ்டமும் பங்காற்றுகிறது என்பதை பட் சுட்டிக் காட்டுகிறார்.


Also Read | Tokyo Olympics: இந்திய தேசியக் கொடியை ஏந்திச்செல்லும் பெருமையை பெறுவாரா பி.வி. சிந்து?


"ஒருவர் நல்ல கேப்டனாக இருந்தாலும், எந்த பட்டத்தையும் வெல்லவில்லை என்றால், மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். ஒருவேளை நல்ல கேப்டனாகவும் இருந்து சிறப்பான திட்டங்களையும்க் கொண்டிருக்கலாம், ஆனால் உங்கள் பந்து வீச்சாளரால் அதை செயல்படுத்த முடியாமல் போகலாம். எனவே அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்திலும் இருப்பது அவசியம்” என்று பட் மேலும் கூறினார்.


தற்போது விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இப்போது இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தயாராகி வருகிறது. இது அணிக்கு கடினமான வேலையாக இருக்கும். எனவே, இந்திய அணியில் செய்யப்படும் மாற்றங்களைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.


Also Read | Olympics: 'A' தர பிரிவில் தகுதி பெற்று வரலாறு படைத்த நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR