16 நாடுகளின் கலந்துக் கொள்ளும் போட்டி டி 20 உலகக் கோப்பை. அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. முதல் கட்ட போட்டிகளுக்குப் பிறகு, 16 அணிகள் சூப்பர் 12 நிலைக்கு 12 அணிகளாக குறைக்கப்படுகிறது. சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கும் என்று espncricinfo.com வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப போட்டிகளில் சில ஓமனில் நடைபெறும். இடைநிறுத்தம் செய்யப்பட்ட 2021 இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) அக்டோபர் 15 ஆம் தேதியன்று முடிவடையும். அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு பங்களாதேஷ், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பப்புவா நியூ கினியா என எட்டு நாடுகள் பங்கேற்கும் போட்டிகள் நடைபெறும். டி 20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகள், சூப்பர் 12 சுற்றில் நான்கு அணிகள் தகுதி பெறும்.
ரவுண்ட் 1 எலிமினேஷன் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடைபெறும். ஆனால் இது தொடர்பாக பேசிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) செய்தித் தொடர்பாளர் ஒருவர் "எந்த அறிவிப்பும் உடனடியாக இல்லை" என்று கூறினார்.
Also Read | WTC 2021: நியூசிலாந்து இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
ஜூன் 28 க்குப் பிறகுதான் போட்டியின் தேதிகள் மற்றும் இடங்கள் தொடர்பான விவரங்கள் வெளியாகும் என்று அவர் தெரிவித்தார். கோவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து போட்டியை நடத்த பிசிசிஐயின் தயார்நிலை தொடர்பான தகவல்களை அறிந்த பிறகுதான் போட்டி தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்படும்.
கடந்த மாதம், போட்டியில் கலந்துக் கொண்ட எட்டு அணிகளில் நான்கில் உள்ள வீரர்களில் சிலருக்கு கோவிட் -19 பாதிப்பு தெரியவந்த பின்னர் ஐ.பி.எல் 2021 பதிப்பு இடைநிறுத்தப்பட்டது. 29 போட்டிகள் மட்டுமே முடிந்தன. மீதமுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை நிறைவடையும்.
டி 20 உலகக் கோப்பை 16 நாடுகளின் நிகழ்வு. முதல் கட்ட போட்டிகளுக்குப் பிறகு, 16 அணிகள் சூப்பர் 12 கள் நிலைக்கு 12 ஆக குறைக்கப்படுகின்றன. சூப்பர் 12 கள் அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | Viral Video: WTC பைனல்ஸில் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR