இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது கிட்டத்தட்ட 39 போட்டிகள் வரை நிறைவடைந்துள்ளது. இருப்பினும் புள்ளிகள் பட்டியலை வைத்து பார்க்கும் போது எந்த அணிகளுக்கு பிளேஆப் செல்லும் வாய்ப்பு அதிகம் என்பது தெளிவாக தெரிகிறது. முதல் 4 அல்லது 5வது இடத்தில் இருக்கும் அணிகளுக்கும், கடைசியில் இருக்கும் அணிகளுக்கும் இடைவெளி அதிகமாக உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் வலுவான நிலையில் முதல் இடத்தில் உள்ளது.  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்கில் மரண பயத்தை காண்பித்து வருகின்றனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆல் ரவுண்டர் பெர்பாமன்ஸை தந்து வருகிறது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நல்ல வெற்றியை பெற்று வருகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்தியாவின் அடுத்த டி20 கேப்டன் இவர் தான்! ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் இல்லை!


பிளேஆப்களுக்கு தகுதி பெற கூடிய அணிகள:


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்


ஹைதராபாத் அணி இந்த வருடம் பல சாதனைகளை தகர்த்துள்ளது. அவர்களது சிறப்பான பேட்டிங்கின் மூலம் இரண்டு முறை அதிகபட்ச ரன்களை பதிவு செய்துள்ளனர். டி20 வரலாற்றில் பவர்பிளேயில் அதிக ரன்கள் அடித்த சாதனையை படைத்துள்ளனர். இந்த சீசனில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா கூட்டணி 404 ரன்களை அடித்துள்ளது.  மேலும் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் டி நடராஜன் ஆகிய இருவரும் ஹைதராபாத் அணிக்காக சிறந்த பந்து வீச்சாளர்களாக இருந்து வருகின்றனர்ஜ். 8.2 என்ற பொருளாதார விகிதத்தில் 19 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.  மற்ற ஆண்டுகளை போல் இல்லாமல் ஹைதராபாத் அணி புதிய தோற்றத்தை இந்த ஆண்டு பெற்றுள்ளது.  தற்போது புள்ளிபட்டியலில் 3வது இடத்தில் உள்ளனர்.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்


கொல்கத்தா அணி இந்த ஆண்டு பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அவர்கள் இந்த சீசனில் 10.6 என்ற சிறந்த ரன் ரேட்டைக் கொண்டுள்ளனர். ஹைதராபாத் அணியை போலவே, அவர்களின் தொடக்க ஜோடியான சுனில் நரைன் மற்றும் பில் சால்ட் சிறப்பான தொடக்கம் கொடுத்து வருகின்றனர்.  நரைன் 176.5 ஸ்டிரைக் ரேட்டில் 286 ரன்களை விளாசியுள்ளார், பில் சால்ட் 169.4 என்ற மொத்தத்தில் 249 ரன்கள் அடித்துள்ளார்.  பேட்டிங் மட்டும் இன்றி நரேன் பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.  கொல்கத்தா அணி தற்போது புள்ளிப்பட்டியிலில் 2வது இடத்தில் உள்ளது.


ராஜஸ்தான் ராயல்ஸ்


யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் ராஜஸ்தான் அணி இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறது.  ஏழு போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டாப் ஆர்டர் தோல்வி அடைந்தாலும் மிடில் ஆர்டரில் ரியான் பராக் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது ஜோஸ் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் ரன்களை அடிக்க துவங்கி உள்ளனர்.  பந்து வீச்சில் ட்ரென்ட் போல்ட் பவர்பிளேயில் செயல்பட்டு வருகிறார். அதே போல யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் சிறப்பாக விளையாடி வருகிறார். 


சென்னை சூப்பர் கிங்ஸ்


சென்னை அணி ஆரம்பத்தில் வெற்றிகளை பெற்றாலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. சென்னை அணியின் டாப் ஆர்டர் தான் கேள்விக்குறி ஆகி வருகிறது. முதல் சில போட்டிகளில் சிறப்பாக ஆடிய ரச்சின் அடுத்தடுத்த போட்டிகளில் ரன்கள் அடிக்கவில்லை. கேப்டன் ருத்ராஜ் மற்றும் சிவம் துபே மட்டுமே சென்னை அணிக்காக ரன்கள் அடித்து வருகின்றனர்.  ஷிவம் துபே 157 ஸ்ட்ரைக் ரேட்டில் சிறந்த பேட்டராக உள்ளார். அதே போல பந்துவீச்சில் மதீஷ பத்திரனாவை நம்பி உள்ளது. முஸ்தாபிசுர் ரஹாம் சில போட்டிகளில் நன்றாக பந்து வீசினாலும், ரன்களை வாரி வழங்குகிறார். தற்போது புள்ளிப்பட்டியிலில் 5வது இடத்தில் உள்ளது.


மேலும் படிக்க | விராட் கோலிக்கு தண்டனையை அறிவித்த பிசிசிஐ! எதற்காக தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ