1 நகரம், 889 கமாண்டோக்கள், 5000 பாதுகாப்புப் பணியாளர்கள் ஏன் இந்த பலத்த பாதுகாப்பு?
டிசம்பர் 13 ஆம் தேதி முதல் பாகிஸ்தானின் (Pakistan) கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் (Karachi National Stadium), பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெறவுள்ளது. ஆறு போட்டிகளும் ஒரே மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
கராச்சி: பாகிஸ்தானின் நிலைமை இன்னும் மாறவில்லை. அதை அவர்களால் மறைக்கவும் முடியவில்லை. பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் காரணமாக அந்த நாட்டிலிருந்து "கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள்" சில பல ஆண்டுகளாக விலகியே இருக்கிறது. ஆனால் தற்போதுகூட அங்கு பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதே கவலைக்குரிய விசியமாக இருக்கிறது. சமீபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு காரணங்களை மேற்கோள்காட்டி நியூசிலாந்து அணி திடீரென பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்தது. அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் உலக அளவில் பாகிஸ்தானுக்கு தலைக்குனிவு ஏற்பட்டது.
தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் (West Indies tour of Pakistan, 2021) மேற்கொண்டுள்ளது. அந்த அணியின் வருகையை அடுத்து, அந்த நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதாவது ஒரு போருக்கு தயாராக இருப்பது போல் அந்த நகரத்தை சுற்றி பாதுகாப்பு வளையம் போடப்பட்டு உள்ளது.
டிசம்பர் 13 ஆம் தேதி முதல் பாகிஸ்தானின் (Pakistan) கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் (Karachi National Stadium), பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெறவுள்ளது. அந்த ஆறு போட்டிகளும் ஒரே மைதானத்தில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | தோனியை கம்பு எடுத்து துரத்திய ரசிகர்கள்! என்ன ஆச்சு?
இரு அணிகளுக்கும் இடையிலான தொடருக்கான பாதுகாப்புத் திட்டத்தை கராச்சி காவல்துறை தீட்டியுள்ளது. இதுக்குறித்து தி நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், நேற்று (வியாழன்) சிந்து பாய்ஸ் ஸ்கவுட்ஸ் ஆடிட்டோரியத்தில் இன்ஸ்பெக்டர் ஜெனரல் இம்ரான் யாகூப் மின்ஹாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில், டிஐஜி பாதுகாப்பு மற்றும் அவசர சேவைகள் பிரிவு அதிகாரிகள் கலந்துக்கொண்டு "கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள்" குறித்து ஆலோசனை செய்ததாக தி நியூஸ் செய்தி சேனல் தெரிவித்துள்ளது.
ஏராளமான பாதுகாப்புப் பணியாளர்கள்:
கராச்சி காவல்துறையின் 13 மூத்த அதிகாரிகள், 315 என்ஜிஓக்கள், 3,822 கான்ஸ்டபிள்கள் மற்றும் தலைமைக் காவலர்கள், 50 மகளிர் போலீஸார், 500 விரைவுப் படை வீரர்கள், 889 கமாண்டோக்கள் என மொத்தம் 46 டிஎஸ்பிக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அனைத்து இடங்களிலும் கராச்சி போக்குவரத்து போலீசார் இருப்பார்கள் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள்:
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் (Pakistan vs West Indies) போட்டி நடைபெறும் மைதானம் மற்றும் வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டல்களில் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். இதனுடன் அவசரநிலையை சமாளிக்க சிறப்பு குழுவும் தயார் நிலையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ALSO READ | விராட் கோலி நீக்கத்துக்கு கங்குலி காரணமா!? சீறும் ரசிகர்கள்!
இதற்கெல்லாம் காரணம் நியூசிலாந்தின் சமீபத்திய பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தப்பிறகு பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட நெருக்கடி தான். அதாவது பயங்கரவாத தாக்குதல், வெடிகுண்டு தாக்குதல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை பாதியிலேயே கைவிட்ட நியூசிலாந்து அணி நாடு திரும்பியது. இதனால் நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் தொடரின் மூலம் "எங்கள் நாடு பாதுகாப்பானது" என்பதை உலகுக்கு நிரூபிக்க பாகிஸ்தான் விரும்புகிறது.
டி20 அணி: நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ஷாய் ஹோப், டேரன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரெல், டொமினிக் டிரேக்ஸ், அக்கேல் ஹொசைன், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடாகேஷ் மோதி, ரொமாரியோ ஷெப்பர்ட், ஒடியன் ஸ்மித், ரோடன் வால்ஷ் தாமஸ், ரோடன் வால்ஷ் தாமஸ், ரோடன் வால்ஷ் தாமஸ், பவல்
ஒருநாள் அணி: ஷாய் ஹோப் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் க்ரீவ்ஸ், அக்கேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, ஆண்டர்சன் பிலிப், ரேமன் ரெய்பர், ரொமாரியோ ஷெப்பர்ட், ஒடியன் டி வால்ஷ் ஜே, ஹேய்டன் ஸ்மித், தாமஸ்
ALSO READ | Cricket Stadium: கிரிக்கெட் மைதானத்தில் யானை தாக்குதல்! இருவர் உயிரிழப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR