Cricket Stadium: கிரிக்கெட் மைதானத்தில் யானை தாக்குதல்! இருவர் உயிரிழப்பு

 லங்கா பிரீமியர் லீக் T20 போட்டித் தொடரின் போட்டிகள் நடைபெறவிருக்கும் மைதானத்தில் பணிபுரிந்த இரு ஊழியர்கள் யானை தாக்குதலில் பலி

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 9, 2021, 06:49 AM IST
  • கிரிக்கெட் மைதானத்தில் யானை தாக்குதல்
  • ஒரு வாரத்தில் கிரிகெட் போட்டி நடைபெறவுள்ள மைதானம் இது
  • இரு ஊழியர்கள் உயிரிழப்பு
Cricket Stadium: கிரிக்கெட் மைதானத்தில் யானை தாக்குதல்! இருவர் உயிரிழப்பு title=

புதுடெல்லி: இலங்கையைப் போலவே இந்தியாவிலும் கிரிக்கெட் பிரபலம். இலங்கை கிரிக்கெட் மைதானத்தில் வேதனையான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் யானை தாக்கியதில் ஊழியர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தால் கிரிக்கெட் உலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.

விபத்து எப்படி நடந்தது?
ஊழியர்கள் இருவரும் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். செவ்வாய்க்கிழமை இரவு ஹம்பாந்தோட்டை மைதானத்திற்கு வெளியே ஊழியர்கள் இருவர் தமது பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு ஊழியர்களின் சடலங்களும் மைதானத்தில் (Cricket Stadium) இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டன. ஒரு ஊழியரின் சடலம் மோட்டார் சைக்கிளுக்கு அருகிலும், மற்றவரின் சடலம் புதர்களுக்கு அருகிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. யானை தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த மரணத்தால் கிரிக்கெட் உலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

போட்டி நடைபெற உள்ளது
இம்மாதம் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் T20 போட்டித் தொடரின் (Lanka Premier League T20 tournament) போட்டிகள் நடைபெறவிருக்கும் மைதானத்தில் பணிபுரிந்த இரு ஊழியர்கள் உயிரிழந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் போட்டிகள் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், மைதானத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Also Read | IPL ஏலத்தில் பண மழையால் மூழ்கவிருக்கும் இந்திய வீரர்கள்

இந்த லீக்கின் எலிமினேட்டர், தகுதிச் சுற்று மற்றும் இறுதிப் போட்டிகள் அம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெறுகின்றன. எலிமினேட்டர் மற்றும் முதல் தகுதிச்சுற்று போட்டிகள் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

2011ல் கட்டப்பட்ட மைதானம்
இலங்கையின் ஹம்பாந்தோட்டாவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக (Cricket World Cup) 2011 இல் கட்டி முடிக்கப்பட்டது. இந்த மைதானம் வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ளது. இங்கு பல முக்கியமான போட்டிகள் நடந்துள்ளன.

2011 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இந்த மைதானத்தில் நடைபெற இருந்தது, ஆனால் அந்த ஆட்டம் மும்பை வாகேடே மைதானத்தில் நடைபெற்றது, இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இந்தியா இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.

Also Read | Ashes-ல் அசத்திய ஸ்டார்க்! இங்கிலாந்து 147க்கு ஆல் அவுட்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News