Kaviya Maran News Tamil : ஐபிஎல் 2025 தொடருக்கான நிர்வாக ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைமையகத்தில் நடந்த இக்கூட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் உள்ளிட்ட பத்து அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அதில் பேசிய காவ்யா மாறன் பேச்சில் பாயிண்டுகள் ஒவ்வொன்றும் அனலாக தெறித்திருக்கிறது. அவர் பேசும்போது, ஆர்டிம், ரீட்டெஷன் ஆகியவற்றுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தினார். குறிப்பாக, இந்திய பிளேயர்கள் மற்றும் வெளிநாட்டு பிளேயர்கள் என இரண்டு வகையான ரீட்டென்ஷன்கள் எல்லாம் இருக்கக்கூடாது, எந்த பிளேயர்கள் இருக்க வேண்டும், எத்தனை பேர் இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அந்தந்த அணி உரிமையாளர்கள் முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் இந்த விதியை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்! இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்!


காவ்யா மாறன் மேலும் பேசும்போது, " சில அணிகள் இந்திய வீரர்களின் அடிப்படையிலும், சன்ரைசர்ஸ் போன்ற அணிகள் வெளிநாட்டு பிளேயர்களை அடிப்படையாக வைத்தும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பிளேயரை உருவாக்க பல வகைகளில் முதலீடு செய்கின்றன. ஆனால் ரீட்டென்ஷன் விதிகள் அணிகளின் முதலீட்டை பாதிக்கும் வகையில் இருக்கிறது. ஆர்டிஎம் அல்லது ரீட்டென்ஷன் குறைந்தபட்சம் 6 இருக்க வேண்டும் அல்லது இரண்டில் ஏதேனும் ஒன்று அதிகமாகவும், ஒன்று குறைவாக கூட வைத்துக் கொள்ளலாம். ரீட்டென்ஷனில் இருக்கும் மற்றொரு பிரச்சனை என்னவென்றால் வீரர்களுக்கான தொகை. விதியின் அடிப்படையில் ஒருவருக்கு அதிகமாகவும், ஒருவருக்கு குறைவாகவும் ஒதுக்கும் கட்டாயத்தில் அணிகள் இருக்கின்றன. இது வீரர்களிடையே சங்கடத்தை உருவாக்கும் வகையில் இருக்கிறது.


அந்தந்த அணி வீரர்களிடம் கலந்தாலோசித்து அவர்களுக்கான தொகையை சரிசமமாக அல்லது வேல்யூ அடிப்படையில் நிர்ணயிக்கும் வகையில் இருக்க வேண்டும் என காவ்யா மாறன் தெரிவித்தார். அதனால் இந்த விதியிலும் மாற்றம் கொண்டு வரவேண்டும். சில வீரர்கள் தங்களுக்கான மார்க்கெட் வேல்யூ குறைவாக இருப்பதாக கருதி ஏலத்துக்கு போக விரும்பும் நிகழ்வுகள் நடத்திருக்கிறது. இந்தப் பிரச்சனையை களைய வேண்டும். ஓய்வு பெற்ற வீரர்களுக்கான மரியாதையை கொடுக்கும் வகையில், அவர்களை குறைந்த தொகைக்கு தக்க வைப்பதை தவிர்க்க வேண்டும். அவர்கள் ஏலத்துக்கு வந்தால் மார்க்கெட் வேல்யூ, பிராண்ட் வேல்யூ அடிப்படையில் அவர்களுக்கான ஊதியத்தை பெற்றுக் கொள்ளப்போகிறார்கள், அவர்களை தக்க வைத்து குறைந்த தொகையை அணிகள் கொடுப்பது என்பது, அவர்களுக்கான மரியாதையை குறைக்கும் வகையில் உள்ளது என்றும் காவ்யா மாறன் கூறினார். 


தோனியை குறைந்த தொகைக்கு ரீட்டெயின் செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டமிட்டிருப்பதை அறிந்து காவ்யா மாறன் இந்த கருத்தை அக்கூட்டத்தில் கூறினார். அடுத்ததாக ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் காயத்தை தவிர மற்ற எந்த காரணத்துக்காவும் திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து விலகினால் அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் காவ்யா மாறன் சுட்டிக்காட்டினார். ஆர்சிபி அணியில் 10 கோடி ஊதியம் வாங்கிய ஹசரங்காவை கடந்த ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் வெறும் 1.5 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. அதனால் அவர் சென்ற வருட ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை. இதனை மனதில் வைத்து ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் பிளேயர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மொத்தமாக காவ்யா மாறனின் பேச்சுகள் அனலாக ஐபிஎல் கூட்டத்தில் தெறித்திருக்கிறது. 


மேலும் படிக்க | ஐபிஎல் தொடரில் வரப்போகும் மாற்றங்கள்...! - இன்று முக்கிய மீட்டிங்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ