வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் வரும் உலக கோப்பை 2019 தொடருக்கு பின்னர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில். தனது அதிரடியான பேட்டிங் மூலம் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை வென்றவர். 


39-வயது ஆகும் அதிரடி ஆட்டக்காரர் எதிர்வரும் 2019-ஆம் ஆண்டு உலக கோப்பை தொடருக்கு பின்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியானர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது, இத்தொடர் கிறிஸ் கெயிலின் இறுதி தொடராக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் பெறும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.



சமீப காலமாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து ஓரங்கப்பட்டு இருந்த கிறிஸ் கெயில், இங்கிலாந்துக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டார். 


ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையினை பெற்ற கிரிஸ் கெயில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 215 ரன்களை கிறிஸ் கெயில் விளாசி உலக சாதனை படைத்தார்.


வரும் மே 30 -ஆம் தேதி துவங்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூலை 14 ஆம் தேதி வரை  நடைபெறுவுள்ளது குறிப்பிடத்தக்கது.