India vs West Indies:  மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.  இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற மேற்கிந்திய தீவுகள் கடும் பயிற்சி உடன் களமிறங்கியது. இருப்பினும் இந்திய அணி கடைசி பத்து ஓவரில் 10 ரன்களை சேஸ் செய்து இந்த போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



மேலும் படிக்க | ஒருநாள் போட்டியை வெறுக்கும் வீரர்கள் - காரணம் கூறும் பாக்., முன்னாள் வீரர்


இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்வது. ஆரம்பம் முதலே மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். ஓபனிங் வீரர் ஷாய் ஹோப் சதம் அடித்து அசத்தினார்.  மேயர்ஸ் 39 ரன்களும், ப்ரூக்ஸ் 35 ரன்கள் அடித்தனர். அதிரடியாக விளையாடிய கேப்டன் பூரன் 77 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை குவித்தது மேற்கிந்திய தீவுகள்.  இந்திய அணி தரப்பில் தாகூர் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.  


 



இமாலய இலக்கை எதிர்த்து களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி தந்தது மேற்கிந்திய தீவுகள். கேப்டன் சிகார் தவான் 13 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஷுப்மான் கில் 43 ரன்களுக்கும், சூரியகுமார் யாதவ் 9 ரன்களுக்கும் ஆட்டம் இழந்து வெளியேறினர். இந்திய அணி 79 ரன்களில் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பிறகு ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருவரும் அரை சதம் அடிக்க தீபக் ஹூடா தன் பங்கிற்கு 33 ரன்கள் குவித்தார்.  


 



கடைசி பத்து ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 100 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அக்சர் படேல் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 5 சிக்சர், 3 பவுண்டரிகள் உட்பட 64 ரன்கள் குவித்தார்.  கடைசி ஓவரில் 3 பந்திகளில் 6 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் சூப்பரான சிக்சர் அடித்து இந்தியாவை வெற்றி பெற செய்தார். இதன் மூலம் இந்த போட்டியில் இந்திய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி உள்ளது.  


மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா விரைவில் ஓய்வு - ரவிசாஸ்திரி அதிர்ச்சி தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ