இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென்ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றது சர்வதேச அரங்கில் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகள் மட்டுமே நிலைத்திருக்கும் என்றும், ஒருநாள் போட்டிக்கான சூழல் எதிர்காலத்தில் மிக குறைந்த அளவே இருப்பதாக முன்னாள் வீரர்கள் பலரும் கணித்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி பேசும்போது, வீரர்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், அவர்களுக்கு மனச் சோர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | வெ.இண்டீஸ் ஜாம்பவானைப் பார்த்ததும் தவானின் ரியாக்ஷன் வைரல்
ஒருநாள் போட்டி, 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போடிகளில் ஒரு வீரர் தொடர்ந்து பங்கேற்பது என்பது இயலாத காரியம். அவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அப்போது, அதிகமாக இருக்கும் போட்டிகளால் பிட்னஸை நீடிக்கச் செய்வது சவாலான விஷயமாக இருக்கும். மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் எந்த வடிவிலான கிரிக்கெட் போட்டி விளையாட வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமை அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் இருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் எடுத்திருக்கும் முடிவுபோல் எதிர்காலத்தில் இன்னும் பல வீரர்கள் எடுக்க வாய்ப்பிருக்கிறது. கிரிக்கெட்டின் அடித்தளம் டெஸ்ட் போட்டி என்பதால், அது இருக்கும். 20 ஓவர் போட்டி பிஸ்னஸ் மற்றும் சுவாரஸ்யம் அதிகம் என்பதால், அந்தபோட்டியையும் குறைக்க முடியாது.
எஞ்சியிருப்பது ஒருநாள் போட்டி மட்டுமே என்பதால், அதனை உலகக்கோப்பைக்காக மட்டுமே விளையாடுவது போல் ஐசிசி மாற்றியமைக்கலாம் என கூறியிருக்கிறார் ரவிசாஸ்திரி. அவருடைய கருத்தை பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் ஆமோதித்திருக்கும் நிலையில், மற்றொரு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன், ஒருநாள் போட்டியை வீரர்கள் விளையாட விரும்பாததற்கான முக்கியமான காரணங்களை கூறியுள்ளார். ஒருநாள் போட்டியில் பீல்டர்களின் எண்ணிக்கை பவுண்டரி லைனில் அதிகமாக இருக்கும். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் அப்படி இருக்காது. இதனால், ஒருநாள் போட்டியை விளையாட அதிக திறமை மற்றும் பொறுமை வேண்டும். அத்தகைய பொறுமையும், திறமையும் இல்லாத சமயத்தில் வீரர்கள் இந்த முடிவை எடுக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா விரைவில் ஓய்வு - ரவிசாஸ்திரி அதிர்ச்சி தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ